Spicejet flights : ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் 50 சதம் மட்டுமே இயக்க கட்டுப்பாடு

தில்லி: Spicejet flights are limited to 50 percent operational control : ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதம் விமானங்களை மட்டுமே இயக்க விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் அடிக்கடி பழுதடைவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் (Spicejet flights) பழுந்தடைந்தது தொடர்பாக அந்த நிறுவனம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதம் விமானங்களை மட்டுமே இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பாதுகாப்பு வழங்குவதற்கும் போதுமான தொழில்நுட்பம், மற்றும் பொருளாதார அம்சங்கள் உள்ளதை விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (Directorate of Civil Aviation) உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி வரை 24 நாள்களில் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 9 முறை ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தரை இறக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11-ஆம் தேதி போயிங் பி737 மேக்ஸ் (Boeing B737 Max) விமானத்தின் மூக்கு சக்கரம் செயலிழந்ததால் ஸ்பைஸ்ஜெட்டின் துபாய், மதுரை இடையேயான விமானம் தாமதமானது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை 11-ஆம் தேதி நடந்த சம்பவத்துடன் 24 நாள்களில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட ஒன்பதாவது சம்பவமாகும்.

ஜூன் 19 -ஆம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் எட்டு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 6 ஆம் தேதியன்று, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு ஷோ-காஸ் நோட்டீஸை (Show-cause notice) அனுப்பிய‌து. பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான விமான சேவைகளை நிறுவுவதில் பட்ஜெட் கேரியர் தோல்வியடைந்துவிட்டது என்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி கூறினார்.

ஜூலை 11-ஆம் தேதியன்று , VT-SZK பதிவு எண் கொண்ட போயிங் B737 மேக்ஸ் விமானம் மங்களூரு-துபாய் இடையே விமானத்தை இயக்கியது, விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் குறிப்பிட்டனர். விமானம் தரையிறங்கிய பிறகு, அதனை ஒரு பொறியாளர் ஆய்வு செய்தார், மேலும் மூக்கு சக்கரம் வழக்கத்தை விட அதிகமாக சுருக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். எனவே விமானத்தை தரையிறக்க பொறியாளர் முடிவு செய்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். துபாய்-மதுரை இடையேயான‌ விமானத்தை (Flight between Dubai and Madurai) இயக்க முடியாததால், மும்பையில் இருந்து துபாய்க்கு மற்றொரு விமானத்தை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறியது: ​​”ஜூலை 11 ஆம் தேதிய‌ன்று, துபாயில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் SG23 கடைசி நிமிட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமானது (Delayed due to technical glitch). உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது, இதனைத் தொடர்ந்து அந்த விமானத்தில் பயணித்த பயணிகளை இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வந்தோம்”. மேலும் எந்தவொரு விமான நிறுவனத்திலும் விமான தாமதங்கள் நிகழலாம். அந்த விமானத்தில் எந்த அசம்பாவிதமோ அல்லது பாதுகாப்பு பயமோ ஏற்படவில்லை. எனவே இதனை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றார் அவர்.