2 Wild Elephants Roaming Around: கூரம்பட்டி, பள்ளிப்பட்டி, பாப்பாரப்பட்டி பகுதியில் சுற்றி திரியும் 2 காட்டு யானைகள்

பாப்பாரப்பட்டி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கிராம பகுதிளை (2 Wild Elephants Roaming Around) விட்டு வெளியேறாமல் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு பிரதான சாலையில் சுற்றி திரியும் இரண்டு காட்டு யானைகள். இதனை வனப்பகுதியில் விரட்டி அடிக்கும் பணியில் வனத்துறை இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறது.

பாப்பாரப்பட்டி, பாலக்கோடு சாலையை கடக்கும் இரண்டு காட்டு யானைகள்.

கடந்த சில நாட்களாக இண்டூர் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு ராட்சத காட்டு யானைகள் தஞ்சம் அடைந்து விவசாய பயிர்களை உணவாக எடுத்துக்கொண்டு வருகிறது.

கரும்பு தோட்டத்தில் இருக்கும் யானையை கண்காணிக்கும் வனத்துறை.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறை உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாமரத்துப்பள்ளம் பின்புறம் உள்ள வனப்பகுதியில் இருந்து பேடறஅள்ளி, கூரம்பட்டி வழியாக பாலவாடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நுழைந்து சவுளூர் அருகே உள்ள ஒரு விவசாயின் கரும்பு தோட்டத்திற்குள் நேற்று (ஜனவரி 3) காலை தஞ்சமடைந்தது. அப்போது கரும்புகளை நாசம் செய்த யானை நேற்று மாலை 6.20 மணியளவில் வெளியேறி மாங்கா தோப்புக்குள் நுழைந்தது. அங்கு இருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பியும் யானையை விரட்டினர்.

பனைகுளம் ஏரியில் நுழைந்த யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள்.

இந்த யானை நக்கல்பட்டி ஏரியில் நுழைந்து சிறிறு நேரம் குளித்து மகிழ்ந்தது. அதன் பின்னர் பூகானஅள்ளி மற்றும் ஆச்சாரஅள்ளி, பழைய பாப்பாரப்பட்டி வயல்களில் நுழைந்து பனைகுளம் ஏரிக்கு யானை நகர்ந்தது. அதன் பின்னரே வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தவாறு சென்றனர். அப்போது பனைக்குளம் ஏரியில் நுழைந்த யானைகள் முட்புதரில் சென்று சிறிது நேரம் தலைமறைவானது. அப்போது ட்ரோன் கேமரா உதவியுடன் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரண்டு காட்டு யானைகள் விவசாயிகள் விளைவித்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசுக்கு வைத்துள்ளனர்.

மேலும் வனப்பகுதிக்கு விரட்டியடித்தாலும் மீண்டும் ஏதோ ஒரு பகுதியில் இந்த இரண்டு யானைகளும் மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. திரும்பி, திரும்பி விவசாயிகளையும், விவசாய பயிர்களையும் சேதம் ஏற்படுத்தி வரும் இந்த யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டியடிக்க வேண்டும் அல்லது முகாம்களுக்கு பிடித்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.