2 killed due to poisonous gas: விழுப்புரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி

விழுப்புரம்: The death of two people due to poisonous gas in a sewage tank near Villupuram has caused tragedy. விழுப்புரம் அருகே கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் அப்பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் கடையின் முன்புறத்தில் கழிவுநீர் தொட்டி ஒன்றைக் கட்டியுள்ளார்.

இந்த கழிவு நீர் தொட்டி சரிவரப் பூச்சு வேலைகள் மேற்கொள்ளப்படாமல் கடந்த 4 மாதங்களாகே மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த தொட்டியை சரிசெய்ய சேகர் முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: Salem Book Festival: சேலம் புத்தகத்திருவிழா: ரூ.1.50 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

இதனைத்தொடர்ந்து பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஐயப்பன், அறிவழகன் ஆகிய மூவரும் மீதமுள்ள பூச்சு வேலையை மேற்கொள்ளச் சென்றுள்ளனர். 4 மாதங்களுக்குப் பிறகு தொட்டியின் மேல்மூடி அகற்றப்பட்டு மூவரும் உள்ளே இறங்கிப் பணி செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியுள்ளது. இதில் மூவரும் மயக்கமடைந்ள்ளனர். இதனைத்தொடர்ந்து மணிகண்டன், ஐயப்பன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட அறிவழகன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் 6: ராபர்ட் மாஸ்டரின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுகுறித்து தகவலறிந்த கண்டமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மணிகண்டன், ஐயப்பன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.