150 kg of Kozhukattai for Trichy Hill Fort Vinayaka: திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை

திருச்சி: On the occasion of Ganesha Chaturthi, 150 Kgs of custard was prepared for Ganesha at Malaikottai. விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

மலைக்கோட்டையில் உள்ள மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் பிரம்மாண்டமான கொழுக்கட்டை தலா 75 கிலோ என 150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்படுகிறது.

இந்த கொழுக்கட்டைகள் பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

தொடர்ச்சியாக 14 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.

மேலும் இன்று மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4-00 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி என பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.