15 Officials removed from AIADMK: அதிமுகவிலிருந்து 15 பேர் நீக்கம்: இபிஎஸ் அதிரடி

சென்னை: 15 officials including former minister K. P. Krishnan, have been removed from the AIADMK.: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கட்சியிலிருந்து 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் சி.ராஜேந்திரன், கே.எஸ். சீனிவாசன், ஆர். ராஜலட்சுமி, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் முகம்மது அலி ஜின்னா , கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் எம். பாரதியார், கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் பி.எஸ். சிவா, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆம்னி பஸ் அண்ணாதுரை, கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் எம்.ஆர். ராஜ்மோகன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் சி.ராமசந்திரன், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைச் செயலாளர் மணவை ஸ்ரீதரன் ராவ், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைத் தலைவர் சுஜைனி, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல இணைச் செயலாளர் விஜய் பாரத், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் மோகனப்பிரியா, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் மோகன், கழக அண்ணா தொழிற்சங்க மின்சாரப் பிரிவுப் பொருளாளர் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.