144 Prohibitory Order : ஆகஸ்ட் 6 வரை தென் கன்னடம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

மங்களூரு : 144 Prohibitory Order in South Kannada District till August 6 : தென் கன்னடம் மாவட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பரவலாக கொந்தளிப்பான‌ சூழல் நிலவியது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டது. இப்போது ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென் கன்னடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.வி.ராஜேந்திரா (District Collector Dr. KV Rajendra) உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தொடரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, தென் கன்னடம் மாவட்டம் (South Kannada District)முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊரடங்கு உத்தரவை பின்பற்றப்பட்டது. மேலும் இதனை இரண்டு நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெல்லாரே மற்றும் சூரத்கல்லில் நடந்த கொலைகளைத் தொடர்ந்து அப்பகுதியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்து பொது நடவடிக்கைகள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை வரை தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

ஜூலை 29 மாலை முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.வி. ராஜேந்திரா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கமான நடவடிக்கைகள் வழக்கம் போல் நடக்கும்.

மங்களூரு மாவட்டம் சூரத்கலில் பாசில் கொலை வழக்கை அடுத்து, உடுப்பி மாவட்டம் கார்காலா (Udupi District Karkala) வட்டத்தின் இன்னா கிராமம் அருகே அடையாளம் தெரியாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இன்னா கிராமம் அருகே வெறிச்சோடிய பகுதியில் ஹூண்டாய் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அடையாளம் தெரியாத காரை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மங்களூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த காருக்கு மங்களூரு சூரத்கல்லில் நடந்த பாசில் கொலை வழக்கில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன் இரவு சூரத்கல்லில் ஃபாசில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இளைஞருக்கு செருப்பு வாங்க வந்த மங்கள நகரைச் சேர்ந்த ஃபாசிலை (Mangala nagar Fazil)தாக்கிவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த ஃபாசில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஃபாசில் கொலைக்குப் பிறகு சிசி கேமராவில் கொலையைச் செய்த கொலையாளிகள் காரில் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் சந்தேகத்திற்கிடமான இயான் நிறுவனத்தின் வெள்ளை நிற கார்களை போலீசார் பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 8 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர் (Police confiscated 8 cars). இதன் பிறகு, கார்காலா வட்டத்தின் இன்னா கிராமத்தில் ஒரு வெள்ளை நிற கார் கண்டுபிடிக்கப்பட்டது.

காரின் பின்பகுதியில் ரத்தக்கறை மற்றும் மைக்ரோ சிம்ஒன்றும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது படுபித்ரி நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அதே கார்தான் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என்பதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஃபாசிலைக் கொல்வதற்காக கொலையாளிகள் அஜித் டிசோசா என்பவரிடமிருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்ததாக மாநகர காவல் ஆணையர் (City Police Commissioner) ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், நகர குற்றப்பிரிவு போலீசார் அந்தக் காரின் ஓட்டுநரை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.