Another gold medal for India : காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்

பர்மிங்காம்: Achinta Sheuli Lifts Games Record 313 kg: காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை அசின்டா சியிலி வென்று தந்துள்ளார். இவர் இதில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டில் (Commonwealth Games) பளுதுாக்கும் பிரிவில் இந்தியாவின் அசின்டா சியுலி, 73 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல் போட்டிகளில் இந்தியாவிற்கு கிடைத்த 3 வது தங்கப் பதக்கம் இதுவாகும். இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22 வது சீசன் நடைபெற்று வருகிறது. 73 கிலோ எடை பளுதுாக்கும் பிரிவில் இந்தியா சார்பில் அசின்டா சியுலி பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 143 கிலோ துாக்கிய அசின்டா, ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் அதிகபட்சமாக 170 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 313 கிலோ பளுதுாக்கிய இவர், காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 3 வது தங்கம் ஆகும்.

முதல் தங்கத்தை மீராபாய் ஜானு (Mirabai Janu) பெற்றுத் தந்ததார். மகளிருக்கான 49 கிலோ ஸ்னாட்ச் சுற்றில் 84 கிலோ மற்றும் க்ளீன் மற்றும் ஜெர்க்கில் 88 கிலோ என மொத்தமாக 172 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். 63 கிலோ எடைப் பிரிவு பளுதுாக்குதலில், இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா 2 வது தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார். காமன் வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா ஸ்னாட்ச் சுற்றில் 140 கிலோ மற்றும் க்ளீன் மற்றும் ஜெர்க்கில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று தந்தார். 3 வது நாள் இறுதியில், இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், அறிமுக வீராங்கனை ஷூலி (Debutant Shuli)143 கிலோ மற்றும் 170 கிலோ தூக்கி மொத்தமாக 313 கிலோ தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார். ஷூலிக்கு கடும் போட்டியைக் கொடுத்த மலேசியாவின் எர்ரி ஹிதாயத் முஹம்மது, போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 138 கிலோ மற்றும் 165 கிலோ தூக்கி மொத்தமாக 303 கிலோவை தூக்கி சிறந்த முயற்சியை மேற்கொண்டார். கனடாவின் ஷாட் டார்சிக்னி 135 கிலோ மற்றும் 163 கிலோ தூக்கி மொத்தமாக மொத்தம் 298 கிலோ தூக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷூலி, ஸ்னாட்ச் பிரிவில் 137 கிலோ, 140 கிலோ மற்றும் 143 கிலோ ஆகிய மூன்று கிளீன் லிஃப்ட்களை நிறைவேற்றினார். அவரது 143 கிலோ முயற்சி விளையாட்டு சாதனையை முறியடிக்க உதவியது மற்றும் அவரது தனிப்பட்ட சிறந்ததை மேம்படுத்தியது. 5 கிலோகிராம் க்ளீன் ஜெர்க் என்ற நிலையில், கொல்கத்தா லிஃப்ட்டர் 166 கிலோ எடையுடன் தொடங்கினார், அதை அவர் எளிதாக உயர்த்தினார். பின்னர் ஷூலி தனது 170 கிலோ முயற்சியை முடித்தார். மூன்றாவது முயற்சியில் 313 கிலோ எடையை தூக்கி புதிய விளையாட்டு சாதனையை படைத்தார்.