12th Class General Exam Hall Ticket: 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: நடப்பாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான (12th Class General Exam Hall Ticket) ஹால்டிக்கெட்டை நாளை (ஜனவரி 4) முதல் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2022,2023 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு வெளியிட்டார்.

அதன்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும். அதில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் எனவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என கூறினார்.

மேலும் நடப்பாண்டுக்கான 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியாக இருக்கிறது.