Women T20I series: டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

மும்பை: India’s squad for women T20I series against Australia announced. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகளிர் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணியினர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகின்றனர். மும்பை டிஒய் பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த இரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டிசம்பர் 9ம் தேதி துவங்கி நடைபெறுகிறது.

இந்த நிலையில் மகளிர் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குகிறார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பூஜா வஸ்ட்ராக்கர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. டிசம்பர் 9ம் தேதி தொடங்கும் போட்டிகள் டிசம்பர் 11, 14, 17, 20 ஆகிய தேதிகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் டி ஒய் பட்டில் மற்றும் சிசிஐபிரபோர்ன் மைதானங்களில் நடைபெறும்.

இந்த தொடரில் இந்திய பெண்கள் அணியில், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேனுகா சிங் தாகூர், மேக்னா சிங், அஞ்சலி ஷர்வானி, தேவிகா வாய்ட்யா, எஸ் மேக்னா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹார்லின் டியோல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் பயிற்சி பந்து வீச்சாளர்களாக மோனிகா பட்டேல், அருந்ததி ரெட்டி, எஸ்பி போகர்கர், சிம்ரன் பகதூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.