virat kohli : மீண்டு வருவார் வீராட் கோஹ்லி

Image Credit : Twitter.

லண்டன் : virat kohli : இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட், டி20 போட்டிகளுக்கு பிறகு அணியின் மூத்த வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமான வீராட் கோஹ்லி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலக சாதனைகள் பலவற்றை செய்த வீராட் கோஹ்லி அண்மைக்காலமாக சரியாக சோபிக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் பல வீரர்கள் சில தொடர்களில் சரியாக ஆடாமல், பின்னர் தங்களின் திறமையை வெளிப்படுத்தி சாதனைகள் செய்த வரலாறு உள்ளது. வீராட் கோஹ்லி, குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எடுத்தவர், விரைவாக 100 ரன்களை 10 முறை எடுத்தவர்.

தொடர்ந்து 4 ஆண்டுகள் 1000 ரன்களைப் பெற்ற இரண்டாவது வீரர் ஆவார். சர்வதேச டி20 போட்டிகளில் விரைவாக 1000 ரன்களைப் பெற்றவர், ஒரு ஆண்டில் அதிக ரன்கள் மற்றும் 50 ரன்கள் அதிக முறை பெற்றவர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 909 புள்ளிகள் பெற்றார். இந்திய வீரர் ஒருவர் பெற்ற‌ அதிகபட்ச புள்ளி இதுவாகும். மேலும் டி 20 போட்டிகளில் 897 புள்ளிகளும் பெற்றுள்ளார்.

ஆடுவரிசையில் நடுவில் களமிறங்கும் கோஹ்லி பல‌ நேரங்களில் துவக்க பேட்ஸ் மேனாகவும் களமிறங்கியுள்ளார். இப்படி பல்வெறு சிறப்புகளை பெற்றுள்ள கோஹ்லியால் அண்மைகாலமாக சிறப்பாக விளையாட முடியவில்லை.

இதன் காரணமாக அவர் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ் அணியின் கேப்டன் பதவியை துறக்க நேரிட்டது. இந்திய அணியின் கேப்டன் பதவியை இழக்க நேரிட்டது. அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி, டி 20 போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.

இதனையடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அணியிலிருந்து நீக்குவதில் அஸ்வீனுக்கு ஒரு நியாயம், வீராட் கோஹ்லிக்கு ஒரு நியாயமா என்று கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்தும், கங்குலி, வீரேந்திர ஷேவாக் ஒரு நியாயம், கோஹ்லிக்கு ஒரு நியாயமா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் அவ்வப்போது விளையாட்டில் சோபிக்காமல் இருப்பது வாடிக்கைதான். பின்னர் மீண்டும் மீண்டு வந்துள்ள‌ பலரை உதாரணம் காட்டலாம். அதுபோன்று நிலைமை தற்போது வீராட் கோஹ்லி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கோஹ்லிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர் மீண்டு வருவார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரது எண்ணமாகவும், விருப்பமாகவும் உள்ளது.