Virat Kohli gets a stylish haircut: ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விராட் கோலியின் ஹேர்கட்

புதுடெல்லி: irat Kohli gets a stylish haircut ahead of T20 World Cup. உலகக் கோப்பைக்கு டி20 போட்டிக்கு முன்னதாக விராட் கோலி ஸ்டைலான ஹேர்கட் செய்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தனது தலைமுடியில் ஸ்டைலிஷான மாற்றம் செய்வதை விரும்புவார் என்பது அனைவரும் அறிந்ததே. வித்தியாசமான சிகை அலங்காரங்களை முயற்சிப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்காத கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், கோஹ்லி மீண்டும் தனது சிகை அலங்காரம் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார்.

விராட் கோலியின் புதிய தோற்றத்தின் பல படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. முதலில், இந்த படங்களை பிரபல சிகையலங்கார நிபுணர் ரஷித் சல்மானி இணையத்தில் பகிர்ந்தார், விராட் கோலிக்கு புதிய தோற்றத்தைக் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜாவுடனேயே” எனத் தலைப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பதிலளித்த பாடகர் ஹார்டி சந்து, “சா கயே குரு” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர் ஒருவர், “அவர் மிகவும் ஹாட்டாக உள்ளார்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 23-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடுவார்கள்.

உலகக் கோப்பைக்கு முன்னதாக, செப்டம்பர் 20 முதல் மொஹாலியில் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி களமிறங்குகிறது.