Virat Kohli : டிராவிட், சச்சின் சாதிக்க முடியாத சாதனையை செய்துள்ள விராட் கோஹ்லி

எட்ஜ்பாஸ்டன்: Virat Kohli : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற உலக சாதனை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெயரில் உள்ளது. டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 210 கேட்ச்களை பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

மற்றொரு இந்திய பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 115 கேட்சுகளை பிடித்துள்ளார். ஆனால் இந்த இரண்டு ஜாம்பவான் வீரர்களும் செய்ய முடியாத சாதனையை விராட் கோலி எழுதியுள்ளார் (Virat Kohli becomes 1st Indian to register unique record).

சர்வதேச கிரிக்கெட்டில் எதிரெதிர் அணிகளுக்கு எதிராக 50 மற்றும் 50 க்கும் கூடுதலான் கேட்ச்களை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் (India Vs England Test match) ஜானி பேர்ஸ்டோ அடித்த பந்தை கேட்ச் பிடித்து இந்த சிறப்பு சாதனையை கோஹ்லி எழுதினார். பேர்ஸ்டோவின் கேட்ச், இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி பிடித்த 50-வது கேட்ச் ஆகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி மொத்தம் 55 கேட்ச்களை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், விராட் கோஹ்லி 101 போட்டிகளில் 101 கேட்சுகளையும், 260 ஒருநாள் போட்டிகளில் 137 கேட்சுகளையும், 97 டி 20 போட்டிகளில் 43 கேட்சுகளையும் பிடித்துள்ளார். இதுவரை மொத்தம் 458 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி 281 கேட்சுகளை பிடித்துள்ளார்.

கேட்ச் பிடிப்பதில் இந்திய சாதனை படைத்த விராட் கோஹ்லி இன்னும் மட்டையை சுழற்றாமல் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 11 ரன்களுக்கு அவுட்டான கோஹ்லி, இரண்டாவது இன்னிங்சில் 40 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

2019-ஆம் ஆண்டு நவம்பர் முதல், விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தை அடிக்க முடியாமல் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி சதம் அடித்து நிகழாண்டு நவம்பருக்கு 3 ஆண்டுகள் ஆகின்றன. 2019-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் மைதானத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார்.

அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோஹ்லி சதம் அடிக்கவில்லை. டெஸ்ட், ஒருநாள், டி 20 என மொத்தம் 70 சதங்கள் அடித்துள்ள விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் (100 சதம்), முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (71 சதம்) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.