US Open tennis tournament : யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதன்முறையாக ஆட்டத்தின் போது, வீரர்களின் பயிற்சியாளர்களும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டிகளின் போது வீரர்களுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் : US Open tennis tournament starts today : யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளது. நிகழாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் திங்கள்கிழமை முதல் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி (US Open tennis tournament) இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியுடன் பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (Serena Williams) ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் வென்று பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது விளையாட்டு ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது.

இந்த நிலையில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்மா ரடுகானு (Emma Raducanu) பட்டத்தை வெல்வதற்காக தயார் நிலையில் உள்ளார். இவர் செரீனா வில்லியம்ஸை மட்டுமின்றி, போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்வியா டெக், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்சியா, டுனிசியாவின் ஜாபியூர் உள்ளிட்டோரிடமிருந்தும் பெரும் சவாலை எதிர்க் கொள்ள உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபெல் நடால் (Rafael Nadal), இந்த போட்டியில் கலந்து கொள்ளும் முக்கிய வீரராவார். 22 கிராண்ட் சலாம் போட்டிகளை வென்று சாதனை செய்திருக்கும், இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதன் மூலம் உலகின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்க முயற்சியை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல தற்போதைய சாமியனும், தரவரிசையில் நம்பர் 1 ஆக உள்ள ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதெவ், கிராண்ட் ஸ்லாம் (Grand Slam) பட்டத்தை வென்று தரவரிசையில் தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி மேற்கொள்வார் என எதிர்பார்ப்பு உள்ளது.

நிகழாண்டு யுஸ் ஓபன் டென்னிஸில் டைபிரேக்கர் (Tiebreaker in US Open Tennis) புள்ளிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டிகளில் 7 புள்ளிகள் பெற்றவர், வெற்றியாளராக கருத்தப்படுவர். ஆனால் நிகழாண்டு, 10 புள்ளிகளை பெறுபவரே வெற்றி பெற்றவராக கருதப்படுவார்கள்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதன்முறையாக ஆட்டத்தின் போது, வீரர்களின் பயிற்சியாளர்களும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது (For the first time, players’ coaches have been allowed to attend the match). போட்டிகளின் போது வீரர்களுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து, வீரர்கள் விளையாடும் போது ஆலோசனை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.