India beat Pakistan : 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்தியா: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

துபாய் : India beat Pakistan by 5 wickets, PM Modi congratulates the Indian team : துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் (India-Pakistan) அணிகள் மோதின. இதில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 148 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வென்றது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் (Captain Babar Azam), முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தொடங்கினார். இதில் பாபர் ஆஸம் 10 ரன்கள் எடுத்து புவனேஸ்வர் குமார் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார். அதனைத் தொடர்ந்து வந்த ஃபக்கர்கான் 2 பவுன்டரிகளுடன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இஃப்திகர் அகமது (Iftikhar Ahmed) 28 ரன்கள், முகமது ரிஸ்வான் 43 ரன்கள், குஷ்தில் 2 ரன்கள், ஆசீப் அலி 9 ரன்கள், முகமது நவாஸ் 1 ரன், ஷாநவாஸ் தஹானி 16 ரன்கள், ஹாரிஸ் ரௌஃப் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தானின் 147 ரன்களை தொடர்ந்து, 148 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்தியா, 2 வது பந்திலேயே கே.எல். ராகுலின் விக்கெட்டை இழந்தது. அவர் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 12 ரன்கள், விராட் கோஹ்லி (Virat Kohli) 35 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 18 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில் ஹார்திக் பாண்டியா (Hardik Pandya) 35 ரன்களும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னும் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா 148 ரன்கள் பெற்று பாகிஸ்தானை வீழ்த்தியது. கிரிக்கெட்டில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.