Team India New Jersey : புதிய ஜெர்சியை வெளியிட்ட இந்திய அணி; புதிய தோற்றம் சூப்பர்

மும்பை: (Team India New Jersey) ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை (ICC T20 World Cup) போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதிய ஜெர்சியுடன் போட்டியிடுகிறது. டீம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சர் அமைப்பான எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் (MPL Sports) உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியை மும்பையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் சீருடை வெளிர் நீல நிற ஜெர்சியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.

2007 டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்தியா (World Cup champion India) (அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. போட்டிக்கு முன், ரோஹித் சர்மாவின் அணி ஆஸ்திரேலியா (அக்டோபர் 17) மற்றும் நியூசிலாந்து (அக்டோபர் 19) ஆகிய இரு அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி (Indian team playing in T20 World Cup) :
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா , புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இருப்பு: முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.உலகக் கோப்பை சாம்பியனான இந்தியா அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne Cricket Ground)தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.