Special Scholarship Scheme: விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: Applications are invited for meritorious athletes special scholarship. திறன்மிகு விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தினை மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்). அதிகபட்சம் 5 நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு அதிகபட்சமாக ஓர் ஆண்டிற்கு ரூ.25 இலட்சம் வழங்கப்படும்.

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான திட்டத்தில் அதிகபட்சம் 50 நபர்கள் (5 மாற்றுத்திறனாளிகள் உட்பட) தேர்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர் 01.12.2022 அன்று 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு அதிகபட்சமாக ஓர் ஆண்டிற்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.

மேலும், வெற்றியாளர் மேம்பாட்டு திட்டத்தில் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மிகாமல் (10 மாற்றுத்திறனாளிகள் உட்பட) தேர்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர் 0112:2022 அன்று 20 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டுவீரர்களுக்கு அதிகபட்சமாக ஓர் ஆண்டிற்கு ரூ 2 இலட்சம் வழங்கப்படும்.

மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டின் சார்பாக பதக்கம் வென்று பங்கேற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வீரர். வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15:12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் குறிப்பாக இணையதளம் மூலம் பதிவு செய்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.