PM pays homage to Dr. Babasaheb Ambedkar:அம்பேத்கர் நினைவுநாளில் பிரதமர் மரியாதை

புதுடெல்லி: PM pays homage to Dr. Babasaheb Ambedkar on Mahaparinirvan Diwas. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில், நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மகாபரிநிர்வாண் தினத்தில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நமது நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தது. மிக விரிவான அரசியல் சாசனத்தை இந்தியாவுக்கு அளிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒருபோதும் மறக்க இயலாதவை”. என பதிவிட்டுள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மரியாதை

இந்தியாவின் அரசியல் சாசனத்தை கட்டமைத்த பாரத ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் மறைந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூக சீர்திருத்தவாதி என்ற வகையில் நாட்டு நிர்மாணத்தில் அவரது பங்களிப்பை ஒருபோதும் மறக்க இயலாது என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் அரசியல் சாசனத்தை கட்டமைத்தவரும், பெரும் சமூக சீர்திருத்தவாதியுமான, பாரத ரத்னா திரு.டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு பணிவான மரியாதை. நாட்டின் மேம்பாட்டுக்கான அவரது பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது”. என தெரிவித்துள்ளார்.