IND vs WI T20: இன்று தொடங்குகிறது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி

மேற்கு இந்திய தீவுகளில் (West Indies) உள்ள டிரினிடாட்டின் தருபாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 (T20) தொடரின் முதல் போட்டியில் இன்று இந்தியா, மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் மென் இந்தியா வென்றது. இந்தத் தொடரை அடுத்து தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இந்த சாதனையை எட்டியது சிறப்பானது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான், டி20 போடிகளில் விளையாடாதது, இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக கருத்தப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள டி20 தொடர் இந்திய அணிக்கு (Indian team) புதிய சவாலைக் கொண்டு வந்துள்ளது. இந்தியா அணி அண்மையில் விளையாடிய போட்டிகள் போல் அல்லாமல், இந்த தொடரில் 3 போட்டிகளுக்கு பதிலாக 5 போட்டிகள் நடைபெற உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் 3 போட்டிகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இங்கு விளையாடும் இந்திய‌ அணியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கருத்தப்படுகிறது. ஒருநாள் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதில் ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (Shubman Gill, Rudraj Gaekwad, Sanju Samson), யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்றவர்கள் அடங்குவர். இவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த டி20 தொடருக்கு ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார். எனவே,காரோனா காரணமாக கே.எல்.ராகுல் வாய்ப்பு கிடைக்காததால், புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 தொடருக்கான எங்கள் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்ட அணி வீரர்களின் பெயர் பட்டியலை பார்ப்போம்.

மேற்கு இந்திய தீவுகளுகு எதிராக டி20 தொடர் விளையாட உள்ள (IND vs WI) இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

பேட்டர்ஸ்: ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர், மற்றும் சூர்யகுமார் யாதவ்

விக்கெட் கீப்பர்: தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த்

ஆல்ரவுண்டர்கள்: அக்சர் படேல், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா

பந்துவீச்சாளர்கள்: அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவி பிஷ்னோய்

பயிற்சியாளர்: ராகுல் டிராவிட், கேப்டன்: ரோஹித் சர்மா

ரோஹித் சர்மாவுடன் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரரைத் தேர்ந்தெடுப்பதுதான் இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் (KL Rahul) இல்லாததால், இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணியில் முதன்மை பேக்கப் ஓப்பனர் இஷான் கிஷன் இருக்கிறார். இரண்டாவதாக, பரிசோதனை முயற்சியாக‌ தொடக்க வீரர் ரிஷப் பந்தைக் களம் இறக்கலாம். இருவருக்கும் வலுவான நிலை உள்ளது, என்றாலும் தொடக்க ஆட்டக்காரர் தேர்வு பெரும்பாலும் ரிஷப் பந்தாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து டி20 தொடரில் (England T20 series) இஷான் கிஷானுக்கு முன்னதாக பந்த் தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய பந்த், சிறப்பாக தனது பணியைச் செய்தார். எனவே, அதே உத்தியுடன், ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக பந்த் விளையாடுவதை இந்தியா ரசிகர்கள் விரும்புகின்றனர். இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அணியில் விளையாடும் போது, ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே இஷான் கிஷன் ரோஹித்துடன் ஓபனராக களத்தில் இறங்குவார். இதனையடுத்து 3-வதாக ஷ்ரேயஸ் ஐயரும், ரிஷப் பந்த் நான்காவதாக இறக்கப்படுவார்கள் என தெரிகிறது. இருப்பினும் விளையாடும் இடம், மைதானம், பிட்ச் ஆகியவையை கருத்தில் கொண்டு பேட்டிங் வரிசையை ஓரளவு மாற்றியமைக்கவும் வாய்ப்புள்ளது.