Ravindra Jadeja : ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேவில் இருந்து வெளியேறி, மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்கிறார்? சுட்டுரையில் ட்ரெண்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் Chennai Super Kings: ஐபிஎல்லின் இரண்டாவது வெற்றிகரமான அணியாக‌ உள்ளது, ஏனெனில் அது எம்எஸ் தோனியின் தலைமையில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றது, ஆனால் அதன் கடைசி சீசன் (ஐபிஎல் 2022) மிகவும் ஏமாற்றமளித்தது, ஏனெனில் அந்த அணி களத்தில் மோசமாக விளையாடியது, மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளையும் உண்டாக்கியது. கடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவி விலகியதை அடுத்து ஜடேஜா கேப்டன் ஆக்கப்பட்டார். அவரது தலைமையில் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், அவர் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து எம்.எஸ்.தோனி அந்த அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றார்.

இதன் பின்னரும் அந்த அணியில் யாரும் சரியாக விளையாடாததால், தொடர்ந்து அந்த அணி தோல்வியை சந்தித்தது. ஜடேஜாவும் அந்த தொடரில் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் 2022 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. இதனால் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் (CSK management), ஜடேஜாவிற்கு பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் ஜடேஜாவிற்கு மோதல் இருப்பது பூடகமாக தெரிந்தது. இந்த விவகாரம் சாதாரண மக்களுக்கும் புரிய தொடங்கியது.

இதனிடையே கடந்த மாதம் ரவீந்திர ஜடேஜாவின் சமூக ஊடக நடவடிக்கைகள் அவரது சிஎஸ்கே அணியில் இருப்பதுவும், எதிர்காலம் குறித்து மீண்டும் கவலையை ஏற்படுத்தியது. ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) சுயவிவரத்தில் 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களில் அவருக்கு, சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தொடர்புகள் குறித்து தனது சமூக ஊடக பக்கங்களிலிருந்த பதிவுகளை நீக்கினார். இந்த வார தொடக்கத்தில், இதனால் அவர் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸை அணியை விட்டு வெளியேறுவார் என்று அவரது ரசிகர்கள் ஊகித்தனர்.

நிகழாண்டு பிப். 4-ஆம் தேதி சுட்டுரையில் சிஎஸ்கேவின் உரிமையாளர்கள் தங்கள் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதில் அளிக்கும் வகையில், “10 ஆண்டு அன்பு ஜட்டு” என்று எழுதப்பட்டிருந்தது. இது ரவீந்திர ஜடேஜாவிற்கு மேலும் மனவருத்ததை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரும் தனது சமூக ஊடக பக்கத்தில், “இன்னும் 10 பேர் போக வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். ஜடேஜா தனது கடைசி ஆட்டத்தை ஐபிஎல் 2022 இல் மே 4 ஆம் தேதிய‌ன்று சிஎஸ்கே அணிக்காக விளையாடினார், இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திட்டமிட்டு, இந்திய- இங்கிலாந்து அணிகள் விளையாடி கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணிக்கு திரும்பினார். இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் அவர் சதம் அடித்து அனைவரையும் அசத்தினார் (He stunned everyone by scoring a century).

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறி, மும்பை இந்தியன்ஸ் அணியில் சேருகிறார் என்று சுட்டுரையில் (Twitter) ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சோகமாகி, வேதனை அடைந்துள்ளனர்.