Chess Olympiad Tournament: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு

தில்லி :Chess Olympiad Tournament: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு திமுக எம்பிக்கள் கனிமொழி, டிஆர் பாலு, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் (Mamallapuram) வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் முதன்முறையாக நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றிருக்கிறது.

இந்த போட்டிக்காக மாமல்லபுரத்தில் அரங்கம் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் (Nehru Indoor Sports Stadium) நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘செஸ் ஒலிம்பியாட்-2022’ ‘Chess Olympiad 2022’ தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடிக்கு இன்று அழைப்பிதழ் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடியை (Narendra Modi) சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (Tamilnadu Chief Minister M.K.Stalin) கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதால், அவரின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.