Pakistan Cricket Board Strongly Opposes Jaisha: ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு

2023 ஆசியக் கோப்பைப் போட்டி பற்றி தகவல்கள் (Pakistan Cricket Board Strongly Opposes Jaisha) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலரின் தலைவருமான ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இந்திய அணி ஆசியக் கோப்பை 7 முறை வெற்றி பெற்றுள்ளது.

மேலும் கடந்த 2022ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வெற்றிபெற்றது. இந்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கிறது.

மேலும் 6 அணிகள் கலந்து கொள்ளும் போட்டியில் இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் உள்ளது. இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் மோத இருக்கிறது. இப்போட்டி எங்கு நடைபெறும் என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.

2023ம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்யாது என்று ஜெய் ஷா கருத்து கூறியிருந்தார். இவரது கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.