IPL Bidding Players: ஐபிஎல் ஏலத்தில் இப்படியும் ஒரு சோகமா? அடிப்படை விலைக்கு கூட போகாத வீரர்கள்

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் ஐபிஎல் (IPL Bidding Players) கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் கொச்சியில் நேற்று (டிசம்பர் 23) நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். அதாவது இது ஒரு மினி ஏலம் என்ற போதிலும் ஒரு சில அணிகள் அதிகமான தொகையை வெளிநாட்டு வீரர்கள் மீது முதலீடு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதன்படி சாம் கர்ரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நிகோலஸ் பூரன் உள்ளிட்டோர்கள் சுமார் ரூ.16 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலம் போனார்கள். அதிலும் சாம் கர்ரன் ரூ.18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர்தான் அதிகமான தொகைக்கு ஏலம் போனவர் என்று கூறப்படுகிறது.

இவருக்கு அடுத்த இடத்தில் கேமரூன் க்ரீன் ரூ.17.50 கோடி மும்பை அணி எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி எடுத்தது. நிகோலஸ் பூரன் 16 கோடிக்கு லக்னோ அணி எடுத்தது. ஹாரி புரூக் ரூ.13.25 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அனைவரை விட மிகவும் அதிகமான விலைக்கு ஏலத்தில் போவார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் ஜெகதீசனை வெறும் ரூ.90 லட்சத்துக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. சிலர் அதிகமான பணத்திற்கு ஏலம் போனார்கள், சிலர் ஏலம் போகாமலேயே இருந்தனர்.

இந்நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட போகாத மிக முக்கிய வீரர்களை பார்ப்போம். வருண் ஆரோன், சந்தீப் ஷர்மா, ஸ்ரேயஸ் கோபால், அபிமன்யு ஈஸ்வரன், தினேஷ் பானா, சவுரப் குமார், ஜெகதீசா சுதீப் மற்றும வெளிநாட்டு வீரர்களான டாம் பாண்டென், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, டிராவிஸ் ஹெட், ரஸ்ஸி வான் டெர் டுசென் உட்பட பலர் ஆவார்கள்.

முந்தைய செய்தியை பார்க்க:People Carrying The Dead Body In Running Water:பாலம் இல்லாததால் ஓடும் தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து சென்ற பொதுமக்கள்

முந்தைய செய்தியை பார்க்க:7 Month Old Child Was Electrocuted: மின்சாரம் தாக்கி 7 மாத குழந்தை உயிரிழப்பு