Asia Cup 2022 : இந்தியா Vs பாக் மெகா ஃபைட், பழிவாங்கும் போட்டிக்கு பிளேயிங் லெவன் இந்திய அணி

ஆசிய கோப்பையில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில், இந்தியா 8 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டியில் முடிவு தெரியவில்லை.

துபாய்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியின் மீது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனமும் உள்ளது. சூப்பர் ஞாயிறு (ஆகஸ்ட் 18) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மெகா ஃபைட்டில் நடைபெறும், அங்கு பாரம்பரிய போட்டியாளர்களான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் (India vs Pakistan) ஆசிய கோப்பையின் (Asia Cup 2022) இரண்டாவது போட்டியில் சந்திக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா பதிலடி கொடுக்கும் போட்டி. கடந்த ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த பழிவாங்கும் போட்டிக்கு இந்தியாவின் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது பெரிய ஆவல்.

ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன்

ரோகித் சர்மா (கேப்டன்), 2. கே.எல். ராகுல் (துணை கேப்டன்), 3. விராட் கோஹ்லி, 4. சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்டியா, 6. ரிஷப் பந்த் / தினேஷ் கார்த்திக், 7. ரவீந்திர ஜடேஜா, 8. புவனேஷ்வர் குமார், 9 .யுஸ்வேந்திர சாஹல், 10. ஆர். அஷ்வின் / ரவி பிஷ்னோய், 11. அர்ஷதீப் சிங்.

போட்டி ஆரம்பம்: மாலை 7.30 (IST)

இடம்: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
நேரடி ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ஹாட் ஸ்டார்

ஆசிய கோப்பையில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில், இந்தியா 8 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டியில் முடிவு தெரியவில்லை.

ஆசிய கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான் நேருக்கு நேர்
போட்டி: 14
இந்தியா வெற்றி: 08
பாகிஸ்தான் வெற்றி: 05
முடிவு இல்லை: 01

ஆசிய கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான் நேருக்கு நேர்

ஏப்ரல் 13, 1984; இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ODI; இடம்: ஷார்ஜா)

அக்டோபர் 31, 1988; இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (ஒரு நாள் போட்டி; இடம்: டாக்கா

ஏப்ரல் 07, 1995; பாகிஸ்தான் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ODI; இடம்: ஷார்ஜா)
ஜூலை 20, 1997; முடிவு இல்லை (ஒரு நாள்; இடம்: கொழும்பு)

ஜூன் 03, 2000; பாகிஸ்தான் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ஒருநாள்; இடம்: டாக்கா)

ஜூலை 25, 2004; பாகிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ஒருநாள்; இடம்: கொழும்பு)

ஜூன் 26, 2008; இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (ODI; இடம்: கராச்சி)

ஜூலை 02, 2008; பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (ODI; இடம்: கராச்சி)

ஜூன் 19, 2010; இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (ஒரு நாள் போட்டி; இடம்: தம்புல்லா)

மார்ச் 18, 2012; இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ஒரு நாள் போட்டி; இடம்: மிர்பூர்)

மார்ச் 02, 2014; இந்தியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (ODI; இடம்: மிர்பூர்)

பிப்ரவரி 27, 2016; இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (டி20; இடம்: மிர்பூர்)

செப்டம்பர் 19, 2018; இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (ODI; இடம்: துபாய்)

செப்டம்பர் 23, 2018; இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (ஒருநாள்; இடம்: துபாய்).