7 people arrested in various crime incidents: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் 7 பேர் கைது

கிருஷ்ணகிரி: Police arrested 7 people involved in various criminal incidents. மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேர் கைது
சிப்காட் காவல் நிலைய பகுதியில் பார்த்திபன் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை 17.08.2022 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தான் குடியிருக்கும் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். மறுநாள் 18.08.2022 ஆம் தேதி காலை 06.00 மணிக்கு எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்தும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பார்த்திபன் சிப்காட் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை செய்த சிப்காட் போலீசார் இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஊத்தங்கரையில் மதுபானம் கடத்தி வந்த 3 பேர் கைது
ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான காட்டேரி பழைய மாட்டு ஆஸ்பத்திரி வழியாக விற்பனைக்காக மதுபானம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஊத்தங்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின் அவர்களின் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலிசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 58 லிட்டர் மதுபானம் இருந்தது. மதுபானம் கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபானங்கள்,₹5,150/- பணம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து மூன்று நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மத்தூரில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது
மத்தூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி To மத்தூர் ரோட்டில் ரோலக்ஸ் தாபா ஓட்டல் அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது எதிரி தாபா ஓட்டல் பின்புறம் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.