India vs New Zealand : ஹர்திக் பாண்டியா கேப்டன், இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளர்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs நியூசிலாந்து தொடர் (India vs New Zealand series) வெள்ளிக்கிழமை வெலிங்டனில் உள்ள ஸ்கை (SKY) ஸ்டேடியத்தில் டி20 போட்டியுடன் தொடங்கும். இரு நாடுகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதும். ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், இந்திய டி20 கிரிக்கெட்டுக்கு விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராகவும் உள்ளனர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2022 அணி உறுப்பினர்களில் பெரும்பாலானோருக்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது. வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் கே.எல்.ராகுல் (Captain Rohit Sharma and Vice Captain KL Rahul), நட்சத்திர பேட்டர் விராட் கோலி, அனுபவமிக்க ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்த தொடரில் விளையாடவில்லை.

ரோஹித் ஷர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் ஓய்வில் இருப்பதால், டி20 உலகக் கோப்பைப் தோல்விக்குப் பிறகு இந்தியாவின் டாப் ஆர்டர் முதலில் கவனிக்கப்படும். குறிப்பாக டி20 கலவையில் ஷுப்மான் கில் இருப்பினும், சூர்யகுமார் யாதவ் அல்லது தீபக் ஹூடா டாப் ஆர்டரில் இடம் பெறுவார் (Either Suryakumar Yadav or Deepak Hooda will be in the top order) என்று கருத்தப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த கேப்டன் (Hardik Pandya is a great captain) என்று பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமண் பாராட்டினார். செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் லட்சுமண், “ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த கேப்டன். குஜராத்தில் (குஜராத் டைட்டன்ஸ்) நடந்த ஐபிஎல்லில் அவர் என்ன செய்தார் என்பதைப் பார்த்தோம். முதல் ஆண்டில் ஒருவர் தலைமைப் பாத்திரத்தை வகித்து கோப்பையை வெல்வது என்பது சாதாரண சாதனையல்ல. அவர் தந்திரமக விளையாடுவதில் சிறந்தவர். இருப்பினும் அவர் களத்தில் மிகவும் அமைதியாகவும் இருக்கிறார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மண் (Coach VVS Laxman)மேலும் கூறுகையில், மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழ்நிலைகள் இருக்கும், அப்போது கேப்டன் அல்லது தலைவராக உள்ளவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றார்.

IND vs NZ 2022 T20 தொடர் அட்டவணை (IST இல் உள்ள நேரங்களுடன்)

1வது T20, நவம்பர் 18, மதியம் 12:00 IST – ஸ்கை ஸ்டேடியம், வெலிங்டன்.

2வது T20, நவம்பர் 20, மதியம் 12:00 IST – பே ஓவல், மவுன்ட் மவுங்கானை.

3வது T20, நவம்பர் 22, மதியம் 12:00 IST – மெக்லீன் பார்க், நேப்பியர்.

இந்தியா விளையாடும் XI vs NZ:

இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் (WK), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்