BCCI offers equal pay : இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம்: பிசிசிஐயின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு

BCCI : இந்திய கிரிக்கெட் வாரியம், இனிமேல் இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

BCCI offers equal pay :  இந்திய கிரிக்கெட் வாரியம் இனிமேல் அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர், ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கும் சம ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான பாகுபாட்டை நீக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளார். பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான பாகுபாட்டை தடுக்க பிசிசிஐ எடுத்த முதல் நடவடிக்கையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் ஒப்பந்தத்தில் உள்ள‌ பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சமத்துவக் கொள்கையை அமல்படுத்தி வருகிறோம். பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான ஊதியம் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கும் வழங்கப்படும் என ஜெய் ஷா ட்வீட் செய்துள்ளார்.

பிசிசிஐயின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான போட்டிக் கட்டணத்தை இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்கள் (Indian women cricketers) பெறுவார்கள். டெஸ்ட் போட்டிகளுக்கு 15 லட்சம் ரூபாயும், சர்வதேச போட்டிகளுக்கு 6 லட்ச ரூபாயும், டி20 சர்வதேச போட்டிகளுக்கு 3 லட்ச ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க ஊதிய இடைவெளி உள்ளது. ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியத்தை அறிவித்த முதல் நாடு நியூசிலாந்து (New Zealand was the first country to declare equal pay). இந்த புதிய உத்தரவு நியூசிலாந்தில் ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. இப்போது பிசிசிஐயும் பாலின சமத்துவத்திற்கான தனது ஆதரவை சமிக்ஞை செய்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஆண், பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்குவது குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன்(New Zealand captain Kane Williamson), முந்தைய வீரர்களின் பாரம்பரியத்தை தற்போதைய வீரர்கள் தொடர்வது முக்கியம் என்றார். அனைத்து மட்டங்களிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் அணிக்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

2017 இல் இங்கிலாந்தில் நடந்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (ODI World Cup) இந்தியாவின் அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு பெண்கள் கிரிக்கெட் வெளிச்சத்திற்கு வந்தது. டீம் இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தாலும், மகளிர் கிரிக்கெட் மீதான மோகம் புதிய உச்சத்தை எட்டியது.