Bird hit Akasa Air flight : அகமதாபாத்- டெல்லி விமானத்தில் பறவை மோதியதால் பதற்றம்

புதுடெல்லி: Akasa Air flight QP 1333 flying from Ahmedabad to Delhi on Oct 27 suffered a bird hit. அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஆகாசா விமானம் பறவை மோதியதால் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அகமதாபாத்திலிருந்து QP 1333 என்ற ஆகாசா ஏர் விமானம் இன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தது. அப்போது விமானம் மீது பறவை மோதியதால் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து ஆகாசா விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஆகாசா ஏர் விமானம் QP 1333 அகமதாபாத்தில் இருந்து டெல்லிக்கு இன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது பறவை மோதியதால், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். இதன் விளைவாக, விமானம் விரிவான ஆய்வுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆகாசா ஏர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் அடுத்தடுத்த விமானம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கள் வாடிக்கையாளர் சேவை குழு பயணிகளுக்கு உதவி வருகிறது. அவர்களின் பயணங்களுக்கு இடமளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல் கடந்த 15ம் தேதி, மும்பைலிருந்து பெங்களூர் சென்ற AKJ1103 என்ற ஆகாசா ஏர் விமானம், கேபினில் எரியும் வாசனை வீசியதன் காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு திரும்பியது. பின்னர் சோதனையிட்டதில் அது பறவை தாக்கியதால் எரியும் வாசனை கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பறவை மோதி ஆகாசா விமானம் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆகாசா ஏர் தனது செயல்பாடுகளை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.