ICC announces squad for the tournament : டி20 உலகக் கோப்பை 2022: இங்கிலாந்தின் வெற்றிக்குப் பிறகு போட்டிக்கான அணியை ஐசிசி அறிவிப்பு

ICC announces squad for the tournament : 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், எம்சிஜி MCGயில் ஆரவாரமான கூட்டத்தின் முன் உற்சாகமான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தை இரண்டாவது T20 பட்டத்திற்கு வழி நடத்தினார். ஒரே நேரத்தில் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பைகளை பெற்று தர உதவிய வீரர் என்று பெயர் எடுத்துள்ளார். இந்த வரலாற்று வெற்றியை அடுத்து, போட்டிக்கான அதிகாரப்பூர்வ அணியை ஐசிசி வெளியிட்டது.

2022 டி20 உலகக் கோப்பைக்கான ஐசிசி அணி (ICC Squad for 2022 T20 World Cup):

அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து)
ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)
விராட் கோலி (இந்தியா)
சூர்யகுமார் யாதவ் (இந்தியா)
கிளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து)
சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே)
ஷதாப் கான் (பாகிஸ்தான்)
சாம் கர்ரன் (இங்கிலாந்து)
அன்ரிச் நார்ட்ஜே (தென் ஆப்பிரிக்கா)
மார்க் வூட் (இங்கிலாந்து)
ஷஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்)

12 வது வீரர்: ஹர்திக் பாண்டியா (இந்தியா).

ICC இன் டி20 உலகக் கோப்பை 2022க்கான அணி (ICC Squad for 2022 T20 World Cup) இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 இங்கிலாந்து வீரர்கள் மற்றும் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்கள் உள்ளனர். வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், அவர் அணியின் தொடக்க ஆட்டக்காரர், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது பேட்ஸ்மேன்களாக சேர்க்கப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, ஷதாப் கான், சாம் கர்ரன், அன்ரிச் நார்ட்ஜே, மார்க் வூட், ஷஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்டோர் உள்ளனர்.