Virat Kohli : நான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை, ஆனால்..” என விராட் கோஹ்லி தனது மௌனத்தை உடைத்தார்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததில் இருந்து விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை.

துபாய்: (Virat Kohli broke his silence) இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்பட்ட விராட் கோஹ்லி, தற்போது தனது கேரியரில் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி சதம் அடிக்காமல் சரியாக 34 மாதங்கள் ஆகின்றன. விராட் கோஹ்லியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்திய அணியில் இருந்து கோஹ்லியை நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், இதுவரை அமைதியாக இருந்த விராட் கோலி, தற்போது தனது பேட்டிங் ஃபார்ம் குறித்து மௌனத்தைக் கலைத்துள்ளார்.

“நான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்று நான் நினைக்கவில்லை. நான் நல்ல மன நிலையில் இருக்கிறேன். அதனால் எனக்கு இது பெரிய விஷயமில்லை. ஆனால் இங்கிலாந்தில் நான் நல்ல மன நிலையில் இல்லை. அங்கு விளையாடும் போது இதனை உணர்ந்தேன். ஆனால் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. நான் இந்த நிலையை கடந்தவுடன், நான் எப்படி தொடர்ந்து செயல்பட முடியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் இப்போது அனுபவிப்பதை வாழ்க்கையில் ஒரு சிறந்த பாடமாக உணர்கிறேன்” என்று விராட் கோஹ்லி (Virat Kohli)கூறினார்.

2019 ஆம் ஆண்டு நவம்பரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் (A century in a Test cricket match against Bangladesh) அடித்ததில் இருந்து விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை. விராட் கோஹ்லி கடந்த ஆயிரம் நாட்களாக சதம் அடிப்பதில் வறட்சியை சந்தித்து வருகிறார். ஆனால் டி20 கிரிக்கெட்டில், விராட் கோஹ்லி சிறப்பான பார்மில் உள்ளார், கடந்த இரண்டரை ஆண்டுகளில் விளையாடிய 24 போட்டிகளில் 42 சராசரியில் 675 ரன்கள் எடுத்துள்ளார்.

விராட் கோஹ்லி தற்போது இந்திய அணியுடன் 2022 ஆம் ஆண்டின் ஆசிய கோப்பைக்கு (Asia Cup) தயாராகி வருகிறார், மேலும் இந்த தொடரை ஆர்வமாக எதிர் நோக்கி உள்ளார். ஆசியக் கோப்பைக்கான‌ டி20 போட்டி சனிக்கிழமை தொடங்கவுள்ளது, ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.