Ben Stokes : இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு

லண்டன்: Ben Stokes retires from ODI cricket : இங்கிலாந்து அணியின் நட்சத்திர‌ ஆல்-ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற்றுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் (England All rounder) பென் ஸ்டோக்ஸ்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான பென் ஸ்டோக்ஸ், இதுவரை 104 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் திடீர் விலகல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (Against South Africa) செவ்வாய்கிழமை நடைபெறும் ஆட்டம் பென் ஸ்டோக்ஸ் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாகும். பென் ஸ்டோக்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி ஆட்டத்தை ரிவர்சைடு மைதானத்தில் தனது சொந்த மண்ணின் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட உள்ளார்..

இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு விடைபெறுவது கடினம்தான். ஆனால் கிரிக்கெட்டின் மூன்று பிரிவுகளில் என்னால் விளையாட முடியவில்லை. அதனால் எனது அணி வீரர்களுக்கு 100 சதவீதம் ஆதரவு அளிக்க முடியாமல் போகிறது. இங்கிலாந்தின் அட்டவணைப்படி கிரிக்கெட்டின் மூன்று பிரிவுகளில் விளையாடுவதற்கு எனது உடல் உறுதியாக இல்லை.

எனவே எனக்கு மாற்றாக‌ மற்றொரு வீரர் விளையாடட்டும். நான் 11 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் விளையாடினேன். இனிமேல் டெஸ்டில் முழு கவனம் (Full focus on the test) செலுத்துவேன். மேலும் டி20 கிரிக்கெட்டில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான பென் ஸ்டோக்ஸ், இதுவரை 104 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஸ்டோக்ஸ் 2912 ரன்கள் எடுத்துள்ளார், அதில் 3 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் 74 விக்கெட்டுகளை (74 wickets) வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக ஆன பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 2-2 என டிரா ஆன‌து.