Monkey pox In Kerala : கேரள மாநிலத்தில் இரண்டாவதாக மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

கேரளம்: Kerala : கேரள மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை (Monkeypox) பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அம்மாநில சுகாதாரத்துறை உறுதி செய்தது.

கேரள அரசு திங்கள்கிழமை இரண்டாவது குரங்கு அம்மை (Monkeypox In Kerala) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் மாநிலம் ஒன்றில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மேலும் இரண்டாவதாக 31 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது மாநிலத்தில் பீதியைத் ஏற்பட்டுள்ளது. “கேரளாவில் குரங்கு அம்மையின் இரண்டாவது பாதிப்பு கண்ணூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது” என்று கேரள மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் துபாயில் இருந்து கேரளா வந்த 31 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் (Minister Veena George) தெரிவித்துள்ளார். “கண்ணூரைச் சேர்ந்த நபர் தற்போது பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயாளியின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்றும் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் (டிஎம்ஓ) கூறியதாவது: வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த இளைஞர் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரியாரம் மருத்துவக் கல்லூரியில் (medical college) அனுமதிக்கப்பட்டார். சனிக்கிழமை மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இளைஞருக்கு, அறிகுறிகள் தெரிந்த‌தை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

“அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, முடிவுகள் வந்த பிறகே குரங்கு அம்மை தொற்றை உறுதி செய்ய முடியும்” என்று மாவட்ட மருத்துவ அலுவலர் தெரிவித்தார். அந்த இளைஞர் தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நாட்டின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் வியாழக்கிழமை பதிவாகியதை அடுத்து, மத்தியக் குழு (Central Committee) மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 12-ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய கேரளாவைச் சேர்ந்த நபருக்கு முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது.

மத்திய சுகாதார அமைச்சகம் உயர்மட்டக் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளதையடுத்து. நிலைமையைச் சமாளிக்க போதுமான பொது சுகாதார நடவடிக்கைகளை மாநில அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். “மத்திய அரசு (Central government) நிலைமையை கவனமாகக் வருகிறது. அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டால் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தொற்றை தடுக்க தீவிர‌ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை என்றால் என்ன?

குரங்கு அம்மை ஒரு அரிதான, பொதுவான லேசான தொற்று ஆகும். பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் சில பகுதிகளில் பாதிக்கப்பட்ட காட்டு விலங்குகளால் இது பரவுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, குரங்கு அம்மை ஒரு வைரஸ் ஜூனோசிஸ் (Viral zoonoses) (விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்) ஆகும், இது மருத்துவரீதியாக குறைவான பாதிப்பு என்றாலும், பெரியம்மை நோயாளிகளிடம் முன்பு காணப்பட்ட அதே அறிகுறிகளைப் போன்றது.

இந்த நோய் முதன்முதலில் 1958-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கு அம்மை என்று அழைக்கப்படும் இது குரங்குகள் அதிகம் வசிக்கும் பகுதியில் அதிக அளவில் காணப்பட்டதால் இதற்கு மங்கி பாக்ஸ் (Monkey pox) என பெயர் வந்தது. இதன் பாதிப்பிலிருந்து குணமாக அதிக காலம் ஆகும். குரங்கு அம்மை தற்போது, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பதிவாகி வருகிற‌து.