Dinesh karthik : இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி: தினேஷ் கார்த்திக்

IND vs ENG: Dinesh Karthik appointed as captain

லண்டன்: Dinesh Karthik : இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்று தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.

தனது 37-வது ஆண்டில் இந்திய அணிக்கு மீண்டும் களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், தற்போது அந்த அணியின் கேப்டனாக ஆகி உள்ளார். இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதும், இந்திய அணிக்கு மொத்தம் 5 பேர் கேப்டனாக உள்ளனர். ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கேப்டன்களாக உள்ளனர். தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik Captain) 6-வதாக கேப்டன் ஆகியுள்ளார். இதுவரை சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்தது இல்லை.

டெர்பிஷயர் அணிக்கு எதிரான டி 20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் போட்டியில் டெர்பிஷயர் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சஞ்சு சாம்சன் 38 ரன்களும், சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 36 ரன்களும், 3-வது இடத்தில் களமிறங்கிய தீபக் ஹூடா 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 59 ரன்களும் குவித்தார்.

பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு தினேஷ் கார்த்திக் சுட்டுரையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நான் பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடி வருகிறேன். ஆனால் எனக்கு அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது இதுவே முதல் முறை. இது ஒரு பயிற்சி ஆட்டம் என்றாலும், இன்று எனக்கு ஒரு பெரிய கௌரவத்தை தேடி தந்துள்ளது. இந்திய அணியில் இடம் பிடித்ததில் பெருமை அடைகிறேன் என தினேஷ் கார்த்திக் அதில் பதிவிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் தினேஷ்கார்த்திக், எம்.எஸ்.தோனியின் வருகைக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். தமிழக அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், அண்மையில் பல போட்டிகளில் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அந்த போட்டிகளில் இறுதி ஓவர்களில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

இதன் விளைவாக அவர் டி 20 போட்டிகளில் விளையாட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின் முதல் போட்டியில் டெர்பிஷயர் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

Just Read : car fell : கடலில் கார் விழுந்ததில் ஒருவர் பலி: காணாமல் போன ஒருவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்

just Read : மகாராஷ்டிராவில் நாளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: பிழைக்குமா அரசு?

IND vs ENG: Dinesh Karthik appointed as captain