TN CM M.K.Stalin : ஒழுங்கீனம், முறைகேட்டில் ஈடுபட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

TN CM M.K.Stalin

தமிழ்நாடு : TN CM M.K.Stalin : ஒழுங்கீனம், முறைகேட்டில் ஈடுபட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேட்டில் ஞாயிற்றுக்கிழமை நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் பேசியது: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாநாட்டு வாயிலாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றிக்கு பின்னால் உங்களின் உழைப்பு உள்ளது என்பதனை நான் அறிவேன். இத்தகைய பொறுப்புக்கு பெண்கள் வரும்போது எத்தனை சிரமங்களை அடைந்திருப்பார்கள் என்பதும் தெரியும். அதே பொறுப்புடன் தங்களுடைய பணிகளை கவனிக்க வேண்டும் என்பதற்காக தற்போது உங்களை அழைத்திருக்கிறோம்.

உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடியாகும். பெரியார் ஈரோட்டிலும், ராஜாஜி சேலத்திலும் நகராட்சி தலைவர்களாக பதவி வகித்தவர்கல். விருதுநகரில் காமராஜர் உள்ளாட்சி பதவி ஒன்றை வகித்துள்ளார். நான் சென்னை மாநகராட்சியில் மேயர் பதவி வகித்தேன். அமைச்சர் மா.சுப்ரமணியம் மேயராகவும், கே.என்.நேரு ஒன்றிய தலைவராக பதவி வகித்துள்ளனர்.

Just Read : Rahul Narwekar : மகாராஷ்டிரா மாநில புதிய சட்டப்பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு

மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சி அமைப்புகள்தான். இந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தான் மக்களிடம் நேரடியாக பணியாற்ற முடியும். விதிகளை மீறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது சட்டப்படியும், நியாயப்படியும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தங்களுடைய பொறுப்புகளில் ஒழுங்கினமாகவோ, நிர்வாகத்தில் முறைகேடு செய்வதாகவோ எனது கவனத்திற்கு வந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்.

தமிழகத்தின் எதிர்காலம் (TN CM M.K.Stalin) என்பது திமுக கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாம் தலை குனியக்கூடாது. உள்ளாட்சி பிரதிநிதிகள் உங்களுக்கு தேவை ஒற்றுமை. அந்த ஒற்றுமை இல்லை என்றால் அனைத்து பணிகளும் முடங்கிவிடும் என்றார்.

Just Read : Rahul Narwekar : மகாராஷ்டிரா மாநில புதிய சட்டப்பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு

TN CM M.K.Stalin : If Any One Commit Disorder And Malpractice I will Become A Dictator Tamil Nadu Chief Minister MK Stalin