Ravindra Jadeja : சிஎஸ்கே முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 இல் ஆர்சிபியில் இணைகிறார்

Ravindra Jadeja will join RCB for IPL 2023: ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை முடிந்ததும், ஐபிஎல் 2023 க்கு கவனம் செலுத்தப்படும், ஏனெனில் ஐபிஎல் 2023 வர்த்தக சாளரம் நவம்பர் மாதத்தில் திறக்கப்படலாம். இன்சைட் போஸ்ட் அறிக்கையின்படி, ஏலத்திற்கு முன்பு ஒருமுறை வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏலம் டிசம்பர்-ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும். அண்மையில் கிடைத்த தகவலின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சேருவார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜடேஜா ஐபிஎல் 2023 இல் எந்த அணியில் விளையாடுவார் என்பது குறித்து இப்போது பெரிய விவாதம் ஆரம்பமாகியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி எப்போதும் சூப்பர் ஸ்டார்களை கொண்ட அணியாக இருந்து வருகிறது. போட்டியின் கடைசி கட்டங்களுக்கு வந்து தோல்வியை தழுவினாலும். அந்த அணியினர் எப்போதும் இறுதி வரை சளைக்காமல் போராடுகின்றனர். மேலும் அந்த அணியில் நடுவில் விளையாடுவதற்கு சரியான ஆல்-ரவுண்டர்கள் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னையின் அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு உதவிய ரவீந்திரா ஜடேஜா, ஆர்சிபி அணியில் இணைத்துக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முன்னாள் கேப்டனும், இந்தியாவின் முன்னணி ஆல்ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) வரிசையில் நடுவில் விளையாடுவதற்கு சரியான பொருத்தமாக இருக்க முடியும், ஏனெனில் ஜடேஜா ஒரு முன்னணி சுழற்பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் சிறந்து விளங்கி வருகிறார். அண்மைக் காலங்களில் ஆர்சிபி அணியில் ஐபிஎல் போட்டிகளில் சிறந்த ஃபினிஷர்கள் இல்லை. மேலும், இறுதி போட்டியில் ஒரு போதும் வென்றதில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, முகாமில் ஒரு முன்னாள் வெற்றியாளரை வைத்திருப்பது ஒரு அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். அதிஷ்டத்தை நம்பும் விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் விளங்குகிறது.

ஜடேஜாவை ஆர்சிபி அணியில் வாங்குவதற்கு டேவிட் வில்லியர்ஸ்( David Villiers ) அல்லது ஷாபாஸ் அகமது போன்ற வீரர்களை விட்டுவிட வேண்டும். முந்தைய ஏலத்தில் பெரிய கையொப்பமிட்ட வில்லியர்ஸ், நான்கு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். மறுபுறம், ஷாபாஸ் அணியில் ஒரு வழக்கமான தொடக்க வீரராக இருந்தார், ஆனால் ஜடேஜாவைப் போலவே அவருக்கும் அனைத்து திறமையும், தகுதிகளும் உள்ளன. எனவே, ஷாபாஸ் அகமதுவிற்கு வேறு அணியில் சேர்ந்து விளையாடுவதற்காக கையெழுத்துக்கு போடும் வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ரவீந்திர ஜடேஜாவுக்கும் (Ravindra Jadeja), சிஎஸ்கே அணிக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ற தகவலால், மற்ற அணிகளுக்கு அவர் மிகப் பெரிய ஈர்ப்பாக இருப்பார். ரவீந்திர ஜடேஜா சென்னை அணியுடன் பிரிந்து செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்திய அணியின் நிரந்தர வீரராக உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படும் ஜடேஜா ஏலத்திற்கு வந்தால் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜடேஜாவை அணிக்கு கொண்டு வருமாறு ஆர்சிபி அணியின் ரசிகர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அணியின் நிர்வாகமும் இதனை பரிசீலிக்கும் எனத் தெரிகிறது.