Cheteshwar Pujara : இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் புஜாரா சாதனை

Image credit : Twitter.

லண்டன்: Cheteshwar Pujara double century : இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் சத்தீஷ்வர் புஜாரா சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் நடப்பது வாடிக்கை. தற்போது நடைபெற்று வரும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் (County Cricket) புஜாரா இரட்டை சதம் அடித்தார். 118 ஆண்டுகள் வரலாற்றில் சசெக்ஸ் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் இரட்டை சதம் அடிப்பது இதுதான் முதல் முறையாகும்.

சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் புஜாரா புதன்கிழமை இந்த சாதனையை செய்துள்ளார். லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மிடில்செக்ஸுக்கு எதிராக புஜாரா 403 பந்துகளில் 231 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்தவுடன், மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் ஆராவாரத்துடன் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இந்திய டெஸ்ட் அணியில் (Indian Test Team) விளையாடி வரும் புஜாரா, அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சோபிக்கவில்லை. ஆனால் நேற்று நடைபெற்ற கவுன்டி கிரிக்கெட் போட்டியில் புஜாரா சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூப்பித்துள்ளார். கவுன்டி கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் பங்கேற்று, 5 முறை சதங்கள் அடித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா சிறப்பாக விளையாடி வருவதால், இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் போட்டி தொடரில் புஜாரா இடம் பெற்றால் சிறப்பாக விளையாடுவார் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.