Nayanthara’s watch Price: நயன்தாராவின் விதவிதமான பிராண்ட் வாட்ச் என்ன விலை தெரியுமா?

சென்னை: Nayanthara’s watch Price: நடிகை நயன்தாராவிற்கு பிடித்த பிராண்ட் வாட்ச்சுகளை வைக்க தனி பிரோவேயே வைத்துள்ளார்.

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் (Tamil Cinema Industries) லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் கடந்த 2003ம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2005ம் ஆண்டு ‘ஐயா’ (Iyya) படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் (Lady Super Star) என்று கருதப்படுகிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்க சமந்தா (Actress Samantha) மற்றும் நயன்தாரா நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

பின்னர் விக்னேஷ் சிவனுடன் (Vignesh Sivan) நடிகை நயன்தாரா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் திருமணம் (Wedding) செய்துகொண்டார். இதனையடுத்து, இருவரும் தாய்லாந்திற்கு சென்று தேனிலவு (Honey Moon) கொண்டாடினர்.

தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்திய நயன்தாரா, ஷாருக்கானுடன் நடிக்கும் ‘ஜவான்’ (Javan) திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

நடிகை நயன்தாராவின் படப்பிடிப்பை தாண்டிய புகைப்படங்களில் (Photo Shoots) அவரது கையில் விதவிதமாக வாட்ச் இருக்கும். வாட்ச் அணிய மிகவும் பிடிக்கும் என்பதால், அவற்றை வைப்பதற்காக பிரத்யேக பீரோவே வைத்துள்ளாராம். அவருக்கு மிகவும் பிடித்த பிராண்ட் Richard Mille வாட்ச் தானாம். இந்த பிராண்ட் வாட்ச்களின் விலை ரூ. 1 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லலாம்.