Burial of Kabaddi player with trophy: வெற்றி கோப்பையுடன் கபடி வீரரின் உடல் அடக்கம்

கடலூர்: The death of fainting while playing kabaddi near Panruti: பண்ருட்டி அருகே கபடி விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த வீரரின் உடல் வெற்றிக் கோப்பையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21) கபடி வீரர். இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படித்து வருகிறார். மேலும் சேலத்திலேயே கபடி அகாடமி (Kabaddi Academy in Salem) ஒன்றில் பயிற்சியும் பெற்று வந்தார்.

இந்நிலையில், பண்ருட்டி அருகே உள்ள மானடிகுப்பம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி (District level kabaddi tournament) நடைபெற்றது. இந்த போட்டியில் விமல்ராஜ் கலந்து கொண்டு விளையாடினார். அதில் துள்ளி குதித்து விளையாடிய அவர், எதிரணி வீரர் பிடிக்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த விமல்ராஜ், மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார்.

அதிர்ச்சியில் சக வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். The death of fainting while playing kabaddi near Panruti அவரை பரிசோதித்த டாக்டர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இகுறித்து தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்குப்பின் விமல்ராஜின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது உடலுக்கு கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு புதைத்த போது, அவரது நண்பர்கள் அவர் கபடி விளையாடி பெற்ற கோப்பையினை உடன் வைத்து புதைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.