Dipika Pallikal : வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிகல், தினேஷ் கார்த்திக்கின் மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகளின் தாயாவார்

தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது மனைவி தீபிகா பல்லிகல் இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளுக்கு கபீர் மற்றும் சியோன் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்தில் உலக ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப்பில் தீபிகா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

பர்மிங்காம்: Dinesh Karthik and his wife Deepika Pallikal : ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உண்டு, விளையாட்டில் ஒரு வெற்றிக் கதை. சிறுவயதில் விளையாட்டில் பெரும் சாதனை படைத்தவர்களும் குறைந்தபாடில்லை. தற்போது அந்த வரிசையில் நாட்டின் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலும் இணைந்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் வெண்கலப் பதக்கம் வென்றார். சவுரவ் கோஷலுடன் விளையாடிய பல்லிக்கல், 11-8, 11-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் டோனா லோபன், கேமரூன் பிலே ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

2015 ஆம் ஆண்டு இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கை (Wicket keeper, batsman Dinesh Karthik( மணந்த 30 வயதான தீபிகா பல்லிகல், அக்டோபர் 18, 2021 அன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளுக்கு கபீர் மற்றும் சியோன் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்தில் உலக ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப்பில் தீபிகா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் 2 வது மனைவி தீபிகா பல்லிகல். 2007 ஆம் ஆண்டு நிகிதாவை (Nikita), தினேஷ் கார்த்திக் மணந்தார். பின்னர் அவரது மனைவிக்கு. தனது சிறந்த நண்பரும், கிரிக்கெட் வீரருமான, முரளி விஜய்கும் தொடர்பு ஏற்பட்டது. தினேஷ் கார்த்திக்கின் மனைவி நிகிதாவுக்கும், முரளி விஜய்க்கும் உள்ள தொடர்பு கார்த்திக்கிற்கு தாமதமாகத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனது மனைவியை விவாகரத்து செய்த தினேஷ்கார்த்திக், மன உளைச்சலுக்கு ஆளானார். அப்படிப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக்கிற்கு தைரியம் கொடுத்தவர் தீபிகா பல்லிகல். ஜிம்மில் முதன்முறையாக தீபிகா பல்லிகலை சந்தித்த தினேஷ் கார்த்திக், பின்னர் அவரை காதலித்து 2015 இல் திருமணம் செய்து கொண்டார்.தற்போது தீபிகா பல்லிகல் காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதனால் தினேஷ் கார்த்திக்கிற்கும், அவரது இரட்டை குழந்தைகள் (Twins), தீபிகா பல்லிகல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.

Emma McKeon : அதிகம் பதக்கம் பெற்ற ஆஸ்திரேலியா வீராங்கனை எம்மா மெக்கியோன்

இங்கிலாந்து நாட்டின் பபர்மிங்காமில் நடந்த முடிந்த காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் அதிகம் பதக்கம் வெற்றவர் என்ற பெருமையை ஆஸ்திரேலியா நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் (Australian swimmer Emma McKeon)பெற்றுள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள சாண்ட்வெல் நீர்வாழ் மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நீச்சல் போட்டியின் போது, பெண்களுக்கான 50 மீட்டர் பட்டர் ஃபிளை (50 meter butterfly) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் எம்மா மெக்கியோன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதான எம்மா மெக்கியோன் (Emma McKeon), 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 56 நாடுகள், யூனியன் பிரதேசங்களை விட அதிகமான பதக்கங்களை பெற்றுள்ளார். இதன் மூலம், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். எம்மா மெக்கியோன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி மற்றும் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றார்.

எம்மா மெக்கியோன் நான்கு முறை உலக சாதனை படைத்தவர், ஒரு தற்போதைய மற்றும் மூன்று முன்னாள் 4×100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேயில் (Freestyle relay). 2020 ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து அவர் பெற்ற 11 ஒலிம்பிக் பதக்கங்கள் அவரை ஆஸ்திரேலியாவின் மிகவும் சிறந்த‌ வீராங்கனை ஆக்கியது மற்றும் ரியோ டி ஜெனிரோவில் நடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கத்தையும், 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் நான்கு தங்கப் பதக்கங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது