இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதல்: இன்னும் நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றுக்கான‌ அட்டவணை

சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் நேற்று இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுடையே நடைபெற்றது. இதில் இலங்கை அணி 176 ரன்களை எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாய்: (Asia Cup 2022 Super 4 stage) ஆசிய கோப்பை குழு நிலை ஆட்டங்கள் முடிவடைந்தன. வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக 155 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சூப்பர்-4-க்குள் நுழைந்துள்ளது. இதனையடுத்து சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியாவுடன், பாகிஸ்தான் மோதுகிறது. பரம எதிரிகளான 2 நாடுகள் மோதிக் கொள்வதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் நேற்று இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுடையே நடைபெற்றது. இதில் இலங்கை அணி 176 ரன்களை எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றுள்ளது (The Sri Lankan team has won).

இந்த நிலையில் (Asia Cup 2022 Super 4 stage) ஞாயிற்றுக்கிழமை சூப்பர் 4 சுற்றுல் 2 வது ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் பரபரப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. தோல்விக்கு பழிவாங்கும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெறுமா? அல்லது மீண்டும் தோல்வி அடையுமா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விளையாடவில்லை (Ravindra Jadeja not play due to injury). இதனையடுத்து அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முழுவதுமாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரிலேயாவில் நடைபெறும் டி 20 உலக கோப்பையில் விளையாட்டு போட்டியிலும் ஜடேஜா விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. அதே போல பாகிஸ்தான் அணி வீரர் ஷாநவாஸும் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இன்று விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் 4 சுற்றுக்கு ஏற்கெனவே ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் (Teams India and Pakistan in Group A), பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று நடந்த சூப்பர் சுற்றின் முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 2 வது போட்டி நடைபெற உள்ளது.

சூப்பர்-4 சுற்று போட்டிகளின் முழு விவரம் (Full Details of Super-4 Round Matches) இங்கே:

சூப்பர்-4ல் ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடும். இந்தியா இன்று பாகிஸ்தானையும், செப்டம்பர் 6 ஆம் தேதி இலங்கையையும், செப்டம்பர் 8 ஆம் தேதி ஆப்கானிஸ்தானையும்எதிர் கொள்கிறது. அதிக வெற்றிகள் அல்லது புள்ளிகளைப் பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும்.

இன்னும் நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றுக்கான‌ ஆசிய கோப்பை 2022 அட்டவணை:

செப்டம்பர் 3: ஆப்கானிஸ்தான் vs இலங்கை அணிகளிடையே நடைபெற்ற போட்டியில், இலங்கை வெற்றி.

செப்டம்பர் 4: இந்தியா vs பாகிஸ்தான் – துபாய்

செப்டம்பர் 6: இலங்கை vs இந்தியா – துபாய்

செப்டம்பர் 7: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் – துபாய்

செப்டம்பர் 8: இந்தியா vs ஆப்கானிஸ்தான் – துபாய்

செப்டம்பர் 9: இலங்கை vs பாகிஸ்தான் – துபாய்

செப்டம்பர் 11: இறுதி – துபாய்

டீம் இந்தியா ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், ஆர் அஸ்வின், ரவி பிஷ்னோய்.

காத்திருப்பு: தீபக் சாஹர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர்.