Congress protest at Ramlila Maidan : மத்திய அரசைக் கண்டித்து தில்லி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் இன்று போராட்டம்: ராகுல்காந்தி பங்கேற்பு

தில்லி: Congress to protest at Ramlila Maidan in Delhi today to condemn the central government: ஜி.எஸ்.டி வரி, விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி தில்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி உள்ளிட்ட போராட்டத்தை நடத்துகிறது. இதில் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பேரணியில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்களை பங்கேற்குமாறு (Congress leaders across the country to participate) காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சனிக்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ், அஜன் மக்கான் ஆகியோர் செய்தியார்களிடம் கூறியது: 2021 ஆம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி வரி, விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் கடுமையாக தலை தூக்கி உள்ளன. இதனைக் கண்டித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களை சந்தித்து, அவர்களது கையெழுத்தை பெற்று, அதனை குடியரசு தலைவரிடம் நேரடியாக ஒப்படைத்தோம்.

2014 ஆம் ஆண்டில் இருந்த விலையை விட தற்போது எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை 40 முதல் 170 சதம் வரை உயர்ந்துள்ளது (The price of essential items including gas cylinder has gone up by 40 to 170 percent). இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சி என்கிற பொறுப்புடன் போராட்டத்தை நடத்தி வருகிறோம். கடந்த ஆக. 5 ஆம் தேதி கறுப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தின் போது ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உள்பட மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு பொஅதில் கூற மறுக்கிறது. கலால் வரி உள்ளிட்ட வரிகள் அதிக அளவில் வசூல் ஆகின்றன (Taxes, including excise duty, are being collected at a high rate). இருந்தப்போதும், பெரும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் அரசு பொதுமக்களுக்கு வரிகளை குறைக்க மறுத்து வருகிறது. அதே நேரத்தில் பாஜகவிற்கு பலம் சேர்ப்பதற்காக எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் குறியாக உள்ளனர். சாதாரண மக்களின் முதுகெலும்பை உடைக்கும் இந்த வலியை மத்திய அரசு உணராமல் உள்ளது. இதனால் அனைத்து மறங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த பேரணி போராட்டம் நடைபெறுகிறது. ஜி.எஸ்.டி வரி, விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் போராட்டம் மூலம் தீர்வு கிடைக்க வேண்டும் என்றனர்.