2nd Test Match: 2வது டெஸ்ட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

புதுடெல்லி: The 2nd Test match between India and Australia starts in Delhi this morning. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று காலை தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று துவங்குகிறது. இதற்காக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு ஏதுவாக அமைந்தது. இதில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் சுழல் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திண்டாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 91 ரன்னிலும் சுருண்டது.

முதல் இன்னிங்சில் கேப்டன் ரோகித் சர்மாவின் அபார சதம் மற்றும் ஜடேஜா, அக்ஷர் பட்டேலின் அரைசதத்தால் 400 ரன்களை இந்தியா குவித்தது. இதனால் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:
இந்திய அணி:
கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, கே.எஸ்.பரத், அஸ்வின், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணி:
வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, ரென்ஷா அல்லது டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், டாட் மர்பி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.