K.Annamalai : அடக்குமுறையைக் கண்டு அஞ்சப்போவதில்லை: கே. அண்ணாமலை

சென்னை: Will not fear oppression : அடக்குமுறையைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்று தமிழக பாஜகவின் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வரின் மூவர்ணக் கொடியை போற்றுவோம் (Let’s salute the tricolor flag) என்ற அறிக்கையை படிக்க நேர்ந்தது. தங்களின் நாடக அரசியலில் அடுத்த தேசபக்தி ஸ்டிக்கர் ஒட்டு காட்சியை நானும் தமிழக மக்களும் அறிந்து கொண்டோம். தமிழ் கூறும் நல் உலகிற்கு தங்களின் தகுதி நன்றாக தெரியும். தாங்கள் தேசியத்தை வெறுப்பவர்கள். போலி திராவிடத்தை தூக்கிப் பிடிப்பவர்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறதோ, அப்போதெல்லாம் திராவிட நாடு கோரிக்கையை கையில் எடுப்பீர்கள்.

மாநில முதல்வராகிய உங்கள் முன்னால், உங்கள் கட்சியின் 2 ஜி ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர் தேவைப்பட்டால் தனி திராவிட நாடு கோரிக்கையை கையில் எடுப்போம் என்று பேசிய போது, அவரைக் கண்டிக்காமல் புன்முறுவலுடன் ரசித்த உங்கள் நாட்டுப்பற்றும், உங்கள் தேசிய பற்றும் (Patriotism and your nationalism) தெளிவாக அனைவருக்கும் புரியும். பிரதமர் நரேந்திர மோடியில் வேண்டுகோளை ஏற்று தேசியத்திற்கு பெருகி வரும் ஆதரவைக் கண்டவுடன் தங்களுக்கு தேள் கொட்டியது போல் ஆகி உள்ளது. அதனால் சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாக கொண்டாட விடாமல் உங்கள் அடக்குமுறை அரசியலை வெளிப்படுத்துகிறீர்கள்.

எங்கள் கட்சியின் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பாரத அன்னைக்கு மரியாதை
செய்ததற்காக, தேசியக் கொடியை (National flag) ஏற்றியதற்காக கைது செய்து இருக்கிறீர்கள், இதுவா தங்களின் தேச பக்தி?, ராணுவர் வீரர் லட்சுமணன் பூத உடலை பெற மதுரை விமான நிலையத்திற்கு பாஜக தலைவர்களும், உறுப்பினர்களும் சென்றிந்தப்போது அங்கே வந்திருந்த தமிழக நிதி அமைச்சர் அஞ்சலி செலுத்தும் அரசு நிகழ்ச்சியை அரசியலாக்கி தரம் தாழ்ந்து கொண்டார். மறைந்த வீரர் லட்சுமணன் திமுகவிற்காக போராடி உயிரிழக்கவில்லை. இந்த நாட்டிற்காக போராடி உயிரிழந்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. இதில் மலிவான அரசியலை செய்தது யார் என்பதனை தமிழ் நாடறியும்.

உங்கள் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை நான் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை (Not supported). ஸ்டிக்கர் ஒட்டும் கலையில் வித்தகரான நீங்களும், உங்கள் கட்சியினரும் தமிழகத்தில் பிரதமருக்கு கிடைத்த ஆதரவைக் கண்டவுடன், தேசப் பற்று ஸ்டிக்கரை நெற்றியில் ஒட்டிக் கொள்ள தயாராகி இருக்கிறீர்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். மூட அரசியல் தனத்தை சட்டப்படி அடக்குவோம் என்று முழங்கி இருக்கிறீர்கள். உங்கள் அடக்குமுறையைக் கண்டு நாங்கள் யாரும் அஞ்சப்போவதில்லை. நாட்டின் இறையாண்மைக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கும் எதிராக எவர் புறப்பட்டாலும், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க பாஜகவின் ஒவ்வொரு தொண்டனும் தயாராக உள்ளார்கள். அவர்கள் பின்னால் நானும், எனது மூத்த தலைவர்களும் இருக்கிறோம் என்பதனை தயவு செய்து மறந்து விட வேண்டாம் என அதில் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழக நிதி அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான அறிக்கையை வெளியிட்டார் இதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது கே.அண்ணாமலை அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.