Unity of opposition parties : எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம்: தொல்.திருமாவளவன்

குடியரசுத்தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு கிடைத்துள்ள வெற்றி எதிர்பார்த்ததுதான்.

பெங்களூரு : preview of the Lok Sabha elections : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்திய‌ ஒற்றுமை மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

பெங்களூரில் வியாழக்கிழமை தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2007ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் (Ambedkar Sudar), பெரியார் ஒளி, காமராஜர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு முதல் மார்க்ஸ் மாமணி விருதும் வழங்கப்படுகிறது. சமூகநீதி, ஜாதிஒழிப்பு, சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டுவரும் தாழ்த்தப்பட்டோர் அல்லாதவருக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி (M. Karunanidhi), கேரளமுதல்வர் பினராயி விஜயன்,புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. G. Stalin) உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவருமான சித்தராமையாவுக்கு வழங்கப்படுகிறது.

கர்நாடகத்தில் சனாதனசக்திகளை எதிர்த்து குரல் கொடுத்துவருகிறார். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடையே நல்லிணக்கம், ஒற்றுமையை ஏற்படுத்தி வருகிறார். மேலும் அச்சமூகங்களின் நலனுக்காக பாடுபட்டுவருகிறார். அவரது பணியை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விருது சித்தராமையாவுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா சென்னையில் ஜூலை 30ம் தேதி (30th July in Chennai) நடக்கிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் முடங்கியுள்ளது. ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகள் மீது சிபிஐ-அமலாக்கத்துறையை ஏவுவது குறித்து விவாதிக்க ஆளுங்கட்சி மறுத்துவருவதால், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன. அதனால் நாடாளுமன்றம் செயல்படாமல் உள்ளது. வயது முதிர்வு, உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டுவரும் சோனியாகாந்தியை விசாரணை என்ற பெயரில் (In the name of investigating Sonia Gandhi) பாஜக அரசு தொல்லை கொடுத்துவருகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த புலனாய்வு அமைப்புகளை பாஜக அரசு ஏவி வருகிறது.

குடியரசுத்தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு கிடைத்துள்ள வெற்றி எதிர்பார்த்ததே (Draupadi Murmu’s success was expected). இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹா கணிசமாக வாக்குகளை பெற்றிருக்கிறார். குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்க்கரேட் ஆல்வா நிறுத்தப்பட்டிருக்கிறார். குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்திய‌ ஒற்றுமை (Unity shown by opposition parties) மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகும். இதே ஒற்றுமை மக்களவை தேர்தலில் வலுப்பெறும். மேலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு இது நம்பிக்கை அளிக்கிறது. தாழ்த்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் வன்கொடுமைகளுக்கு இலக்காவது குறித்து மத்திய அரசு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது (Tamil Nadu is at the top) வேதனை அளிக்கிறது. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தென் தமிழகத்தில் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

இதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். இது தொடர்பாக இரு கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தியிருக்கிறார். தமிழக அரசின் நடவடிக்கை எதிர்காலத்தில் இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் (End atrocities) என்ற நம்பிக்கை உள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலவளவு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது குறித்த பலமுறை முறையிட்டுள்ளோம். அங்கு சுடுகாட்டுக்கு செல்ல தனிப்பாதை கூட இல்லை. இது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வுகாண்போம் என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவருமான சித்தராமையாவை அவரது இல்லத்தில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், அம்பேத்கர் சுடர் விருது வழங்குவது குறித்து தெரிவித்து, அந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அளித்தார். இந்த விருதை ஏற்றுக்கொள்வதாகவும் (Accepting the award), அதை பெற்றுக்கொள்ள சென்னைக்கு வருவதாகவும் சித்தராமையா உறுதி அளித்தார்.