Edappadi Palaniswami : திமுகவினர் அதிமுகவிற்கு எண்ணற்ற தொந்தரவுகளை தருகிறார்கள்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

கிருஷ்ணகிரி: The DMK is giving the AIADMK innumerable troubles : திமுகவினர் அதிமுகவிற்கு எண்ணற்ற தொந்தரவுகளை தருகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கிருஷ்ணகிரியில் பேசியது: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) பேசுகிறார். நமக்கு திமுகவினர் எண்ணற்ற தொந்தரவுகளை கொடுக்கிறார்கள். இன்று நான் உடனே இந்தப் பதவிக்கு வரவில்லை. ஆரம்பத்தில் கட்சி உறுப்பினர், பிறகு கிளை செயலாளர் ஆகி, பின்னர் படிப்படியாக பல பதவிகளை அடைந்து இன்று பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளேன். 10 முறை நான் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு இருக்கிறேன். எம்எல்ஏ, எம்பி பதவிகளுக்கு எனக்கு போட்டியிட ஜெயலலிதா வாய்ப்புகளை தந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கூட்டம் கூட்டிய போது, திமுகவினர் எப்படி எல்லாம் நடந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என ஓட்டு போட்டார். இப்போது பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் (O. Panneerselvam was removed as a core member). அவர் இனி மீண்டும் கட்சியில் சேர ஒரு சதம் கூட வாய்ப்பு கிடையாது.

முதல்வர் மு.க.ஸ்டாலினால் அவரது கட்சி நிர்வாகிகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. வட கிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் முன்பே சென்னை குளமாகி விட்டது. எந்த நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. 4 ஆண்டு 2 மாத எங்களின் ஆட்சியில் செய்த பணிகளை மக்கள் அறிவார்கள். அதிமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகளை போடுவதை திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர் கொள்வோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது (A historic verdict has come in the Supreme Court regarding seat reservation). இதனால் யாருக்கும் எங்கேயும் இதனால் பாதிப்பு இல்லை என்றார்.