மது போதையில், அதிக வேகமாக வாகனம் ஓட்டுவர்களிடம் புதிய அபராதம் வசூல் டிஜிபி சைலேந்திர பாபு

சேலம் : DGP Shylendra Babu: to levy new fines on drunken, over-speeding drivers : மது போதையில், அதிக வேகமாக வாகனம் ஓட்டுவர்களிடம் மட்டும் புதிய அபராதம் வசூல் செய்யப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சேலம் மாநகரில் 2021 ஆம் ஆண்டு 24 கொலை வழக்குகளும், நிகழாண்டில் 14 கொலைகளும் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 42 சதம் குறைவு (42 percent less than last year).

தமிழகத்தில் லாட்டரி, போதைப்பொருள் விற்பனை பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கண்காணித்து தடுக்கப்பட வேண்டும். சேலம் மாவட்ட‌த்தில் 30 கிராமங்கள் உள்பட சேலம் சரகத்தில் 120 கிராமங்கள் போதைப்பொருள் இல்லாத கிராமங்களாக அறியப்படுகின்றன (120 villages in Salem regain are known as drug free villages).

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் புதிய அபராதம் விதிக்கும் முறையை (New Penalty Scheme under Motor Vehicles Act) அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி தமிழக காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது விதிக்கும் அபராத தொகைக்கு மாற்றுக் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் (People who drive under the influence of alcohol and drive too fast), ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாகசம் செய்யும் வகையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மட்டுமே புதிய அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல காய்கறி வாங்க கடைக்கு வருபவர்கள் உள்ளிட்டோரிடம் மனிதாபிமான முறையில் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றார்.