BJP: தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் அதிரடி மாற்றம்

தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் அதிரடி மாற்றம்
தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் அதிரடி மாற்றம்

BJP: அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்றதும் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்ய முடிவு செய்தார். சரியாக செயல்படாத மாவட்ட தலைவர்களுக்கு பதிலாக புதியவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்.

அதன்படி ஒவ்வொரு மாவட்ட தலைவரின் செயல்பாடுகளையும் நேரில் அறிவதற்காக கடந்த சில மாதங்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது மாவட்ட தலைவர்களின் செயல்பாடு, எத்தனை ஆண்டுகளாக மாவட்ட தலைவராக இருக்கிறார். அவரது தலைமையில் மாவட்ட அளவில் கட்சியின் வளர்ச்சி? தேர்தல்களில் பெற்ற வாக்குகளின் சதவீதம், மாவட்ட தலைவர்களுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையேயான உறவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்தார்.

அதன் அடிப்படையில் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியலை தயாரித்தார். பதவிகள் பெறுவதற்காக பலர் கமலாலயத்துக்கு படையெடுத்தனர். ஆனால் அண்ணாமலை பொதுவாக தேவையில்லாமல் நிர்வாகிகள் நேரில் வந்து சந்திப்பதை விரும்பவில்லை. என்ன விஷயம் என்பதை கேட்டு அதை பொறுத்தே சந்திக்க நேரம் ஒதுக்கி வருகிறார்.

யாரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம். அவரவர் மாவட்டங்களில் கட்சி வேலையை பாருங்கள். நான் மாவட்டங்களுக்கு வரும் போது நேரில் சந்திக்கலாம் என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.

எனவே புதிய நிர்வாகிகள் தேர்தலிலும் சிபாரிசுகளை தவிர்த்து தகுதியின் அடிப்படையில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்தார். புதிய நிர்வாகிகள் தொடர்பாக கட்சி மேலிடத்துடன் நேரில் ஆலோசனை நடத்திய பிறகே நிர்வாகிகள் பட்டியலை உறுதி செய்துள்ளார்.

எனவே புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாவதில் காலதாமதம் ஆனது. நேற்று இரவு புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

ஈரோடு வடக்கு, கோவை வடக்கு ஆகிய 2 மாவட்டங்களுக்கு பெண்கள் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கோவை வடக்கு மாவட்ட தலைவராக சங்கீதா வடக்கு மாவட்ட தலைவராக கலைவாணி விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கட்சி மாவட்டப்படி மொத்தம் 60 மாவட்டங்கள். இதில் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தேர்வு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 59 மாவட்டங்களில் 26 மாவட்டத்துக்கு பழைய மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

புதிய மாவட்ட தலைவர்கள் பெயர்கள் விபரம் வருமாறு:-

தர்மராஜ் (கன்னியாகுமரி), சித்ராங்கதன் (தூத்துக்குடி தெற்கு), வெங்கடேசன் சென்ன கேசவன் (தூத்துக்குடி வடக்கு), தயாசங்கர் (திருநெல்வேலி), ராஜேஷ் ராஜா (தென்காசி), கதிரவன் (ராமநாதபுரம்), மேப்பல் சத்தியநாதன் (சிவகங்கை), செல்வம் அழகப்பன் (புதுக்கோட்டை), பாண்டுரங்கன் (விருதுநகர் கிழக்கு), சுரேஷ்குமார் (விருதுநகர் மேற்கு),

சரவணன் (மதுரை நகர்), மகா சுசீந்திரன் (மதுரை புறநகர்), தனபாலன் (திண்டுக்கல் கிழக்கு), கனகராஜ் (திண்டுக்கல் மேற்கு), பாண்டியன் (தேனி), ராஜசேகரன் (திருச்சி நகர்), அஞ்சாநெஞ்சன் (திருச்சி புறநகர்), செந்தில்நாதன் (கரூர்), செல்வ ராஜ் (பெரம்பலூர்), ஐயப்பன் (அரியலூர்), ஜெய்சதீஷ் தஞ்சாவூர் தெற்கு), சதீஷ்குமார் (தஞ்சாவூர் வடக்கு), பாஸ்கர் (திருவாரூர்), கார்த்திகேயன் (நாகப் பட்டினம்), அகோரம் (மயிலாடுதுறை), மணிகண்டன் (கடலூர் கிழக்கு),

மாமல்லன் (கடலூர் மேற்கு), ராஜேந்திரன் (விழுப்புரம்), விஜயன் (ராணிப் பேட்டை), மனோகர் (வேலூர்), வாசுதேவன் (திருப்பத்தூர்), பாலசுந்தரம் (கள்ளக்குறிச்சி), ஜீவானந்தம் (திருவண்ணாமலை தெற்கு), ஏழுமலை (திருவண்ணாமலை வடக்கு), சிவப்பிரகாசம் (கிருஷ்ணகிரி கிழக்கு), நாகராஜ் (கிருஷ்ணகிரி மேற்கு), பாஸ்கர் (தர்மபுரி), வேதா சுப்பிரமணியம் (செங்கல்பட்டு), பாபு (காஞ்சிபுரம்),

சரவணன் (திருவள்ளூர் கிழக்கு), அஷ்வின் குமார் (திருவள்ளூர் மேற்கு), காளிதாஸ் (தென்சென்னை), சாய் சத்தியன் (சென்னை கிழக்கு), விஜய் ஆனந்த் (மத்திய சென்னை கிழக்கு), தனசேகர் (மத்திய சென்னை மேற்கு), கிருஷ்ணகுமார் (வட சென்னை கிழக்கு), கபிலன் (வட சென்னை மேற்கு), சுரேஷ்பாபு (சேலம் நகர்), சண்முகநாதன் (சேலம் கிழக்கு), சுதிர் முருகன் (சேலம் மேற்கு), சத்தியமூர்த்தி (நாமக்கல்), செந்தில்குமார் (ஈரோடு தெற்கு), கலைவாணி விஜயகுமார் (ஈரோடு வடக்கு), மங்களம் ரவி (திருப்பூர் தெற்கு), செந்தில்வேல் (திருப்பூர் வடக்கு), பாலாஜி உத்த மராஜ் (கோயம்புத்தூர் நகர்), வசந்தராஜன் (கோயம்புத்தூர் தெற்கு), சங்கீதா (கோயம்புத்தூர் வடக்கு), மோகன்ராஜ் (நீலகிரி)

மாநில செயற்குழு உறுப்பினர்களாக 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

பால்ராஜ் (தூத்துக்குடி தெற்கு), ராமமூர்த்தி (தூத்துக்குடி வடக்கு), ராம ராஜா (தென்காசி), கஜேந்திரன் (விருதுநகர் கிழக்கு), ராதாகிருஷ்ணன் (விருதுநகர் மேற்கு), முரளீதரன் (ராமநாதபுரம்), ராமசேதுபதி (புதுக்கோட்டை), ராகவன் (திருவாரூர்), நேதாஜி (நாகப்பட்டினம்), வெங்கடேசன் (மயிலாடுதுறை), இளஞ்ச்செழியன் (கடலூர் மேற்கு), ராஜா (திருவள்ளூர் கிழக்கு), ராஜ்குமார் (திருவள்ளூர் மேற்கு), தட்சிணாமூர்த்தி (வட சென்னை மேற்கு), தசரதன் (வேலூர்), வெங்கடேசன் (திருவண்ணாமலை வடக்கு), தர்மலிங்கம் (கிருஷ்ணகிரி கிழக்கு), மண்கண்டன் (சேலம் கிழக்கு), அஜித்குமார் (ஈரோடு வடக்கு), ருத்ரகுமார் (திருப்பூர் தெற்கு).

இதையும் படிங்க: மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி- கல்லூரி டீன் அதிரடி மாற்றம்