Summer Heat: வடமேற்கு இந்தியாவில் நாளை முதல் வெப்ப அலை குறைய வாய்ப்பு-இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையம்
இந்திய வானிலை மையம்

Summer Heat: தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலையாக 40.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இது டெல்லியில் கடந்த 72 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாகும். மேலும், வெப்ப அலை வீசியதால், மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நாளை முதல் வெப்ப அலை குறைய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நாளை முதல் வெப்ப அலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா-சண்டிகர், தெற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பை அலை குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Heatwave May Abate Over Delhi, Northwest From Tomorrow: Weather Office

இதையும் படிங்க: BJP: தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் அதிரடி மாற்றம்