Ready to ally with anyone: திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன்

சென்னை: AMMK general secretary TTV inakaran has said that he is ready to form an alliance with whomever he wants to defeat DMK. திமுகவை வீழ்த்த யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டணி அமைக்க தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, திமுகவை வீழ்த்துவதற்கு கூட்டணி அமைக்க நேசக்கரம் நீட்டத் தயார் எனவும், கூட்டணிக்கு தலைமையேற்பது யார் என்பதை அந்த நேரத்தில் முடிவு செய்வோம். திமுக. வரம்பு மீறி ஆட்சி செய்யு போது மூக்கணாங்கயிறு போல் ஆளுநர் செயல்படுவது தேவை தான் எனவும், ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்தால் மாட்டிக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், திமுகவிற்கு வாக்களித்த மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சியிலிருக்கும்போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக திமுக அரசு கூறிவருகிறது. ஆனால் கண்முன்னே பள்ளங்கள் இருந்து வருகிறது. அவர்களுக்கு சதவீதம் மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறதே தவிர, பொய் சொல்லாமல் மக்களிடம் உண்மையை தெரிவித்திருக்காலம்.

தற்போது மக்களிடம் விழிப்புணர்வு இருந்து வருகிறது. எனவே மக்களிடம் உண்மையை கூற வேண்டும். செய்ய முடிந்ததை சொல்லுங்கள். மக்களை ஏமாற்ற முடியாது எனவு், அதேபோல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.