Tamil Nadu BJP President K. Annamalai : நாட்டின் வளர்ச்சியை பாத யாத்திரையின் போது ராகுல் காந்தி அறிந்து கொள்வார் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை

சென்னை : Rahul Gandhi will learn about the country’s development during the Pada Yatra: தமிழகம் முதல் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். பாதயாத்திரையின் போது நாட்டின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருவதை அவர் அறிந்து கொள்வார் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா ஒற்றுமை பயணம் என்கின்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார் (Rahul Gandhi to undertake padayatra). இந்த பாத யாத்திரையின் போது, கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நாடு அடைந்துள்ள வளர்ச்சிப் பற்றி ராகுல் காந்தி தெரிந்து கொள்ளட்டும்.

தலைமுறை தலைமுறையாக அரசியலில் இருக்கும் ராகுல்காந்தியின் முன்னோர்கள் 65 ஆண்டுகளாக இந்தியாவில் முடியாது என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து (For 65 years Rahul Gandhi’s forefathers have deeply planted the idea that India cannot) இருந்தாலும், அதனை முறியடுத்து சுயசார்பை நோக்கி இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா விரைவில் விஸ்வகுரு என்கிற தகுதியை பெறும். அதனைக் கண்டு ராகுல் காந்தி பெருமை கொள்வார் என்று நம்புவோம்.

திமுக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளை சந்திக்கும் போதும் அவர்களை மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரியை குறைக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்த வேண்டும் (While meeting all the alliance parties including DMK, Rahul Gandhi should urge them to reduce the tax levied on petrol and diesel in the states.). ராகுல் காந்தியின் வாகங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப வேண்டும் என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் மலிவான விலையில் நிரப்பிக் கொள்ளலாம் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.