NEET results will be announced today : இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்

சென்னை: NEET results will be announced today : இளைநிலை மருத்துவப் கல்விகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (செப்.7) வெளியாக உள்ளது.

தேசிய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் (medical courses including MBBS, BDS)உள்ளிட்ட இளநிலை மருத்துவப் கல்விகளுக்கு தேசிய தகுதியை காண்பதற்கான நுழைவு தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைகள் நடைபெறுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது.

அதன்படி நிகழாண்டு நீட் தேர்வு தேசிய அளவில் 497 நகரங்களில் 3,570 மையங்களில் நடைபெற்றது (The NEET exam was held at 3,570 centers in 497 cities nationally). இந்த தேர்வை 17.78 லட்சம் பேர் மாணவர்கள் பங்கு கொண்டு தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1.16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்து கொண்டனர். விடைக் குறிப்பு தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள்கள் ஆக. 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப் படுகிறது. மாணவர்கள் மதிப்பெண் விவரங்களை http://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் பொறியியல் கல்விக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு செப். 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் 1.19 லட்சம் பேர் நீர் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். கேரள மாநிலத்தில் 1.16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீர் தேர்வை எழுதி உள்ளனர்

நீட் தேர்வு 2022 முடிவுகளை இணையதளங்களை பதிவிறக்கம் செய்ய
NTA NEET 2022 முடிவுகளைப் பதிவிறக்குவதற்கான NTA அதிகாரப்பூர்வ இணையதளங்கள்,

Neet.nta.nic.in

Ntaresults.nic.in

Nta.ac.in

மதிப்பெண்களின் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு:

நீட் மதிப்பெண்கள் தற்போதைய கல்வி அமர்வுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அல்லது ஒரு ஆண்டு, இந்திய கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது. இருப்பினும், சர்வதேச கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, NEET UG 2022 மதிப்பெண்களின் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.